ஒரு குற்றச் செயல் தொடர்பான புகாரை குறிப்பிட்ட காவல்நிலையத்தில் பதிவு செய்யும்போது, அந்த சம்பவம் வேறொரு காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடந்திருந்தால், சீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். சமந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு இது அனுப்பப்படும்.
மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில், 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் மே 4-ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்கு முன்பு, அதே காவல்நிலையத்தில் 2 குக்கி- சோமி இனத்தைச் சேந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யபட்டதாக சீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கிழக்கு இம்பாலில் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்ப, ஒரு மாதம் வரை எடுத்துக்கொண்டுள்ளனர்.
மே 5ம் தேதி, 21 வயது மற்றும் 24 வயது மதிக்கதக்க குக்கி- சோமி இனத்தைச் சேர்ந்த பெண்கள், அவர்கள் தங்குமிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவரும் கிழக்கு இம்பாலில் உள்ள கார்களை சுத்தம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். கிட்டதட்ட 100 முதல் 200 பேர் இந்த கொடூர சமப்வத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மே 16ம் தேதி, கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணின் தாய், கங்கோபி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அங்கு இது தொடர்பாக சீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு இம்பாலில் உள்ள ப்ரோம்பட் காவல் நிலையத்திற்கு சமந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஜூன் 13ம் தேதிதான் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எந்த கைதும் இதுவரை நடைபெறவில்லை.
சீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன?
ஒரு குற்றச் செயல் தொடர்பான புகாரை குறிப்பிட்ட காவல்நிலையத்தில் பதிவு செய்யும்போது, அந்த சம்பம் வேறொரு காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடந்திருந்தால், சீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். சமந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு இது அனுப்பப்படும்.
இந்த சீரோ எப்.ஐ.ஆர்-க்கு வழக்கமான எப்.ஐ.ஆர் எண் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த சீரோ எப்.ஐ.ஆர்-ஐ பெரும் காவல்நிலையம், புதிய எப்.ஐ.ஆர் ஒன்றை பதிவு செய்து விசாரணையை தொடங்கும்.
சீரோ எப்.ஐ.ஆர் என்று கொண்டுவரப்பட்டது
பெண்களுக்கு எதிராக நடக்கும், பாலியல் வன்கொடுமைக்கு விரைவில் தண்டனை வழங்குவது தொடர்பாக நீதிபதி வர்மா கமிட்டி, சீரோ எப்.ஐ.ஆர் முறையை கொண்டு வந்தது. இந்நிலையில் 2012ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின்போது இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் குற்றச்சம்பவம் நடைபெற்ற இடத்திலோ அல்லது அவர்கள் சொந்த ஊரில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்பதில்லை, எந்த காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும், இந்த சீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்
source https://tamil.indianexpress.com/explained/manipur-violence-what-is-a-zero-fir-and-why-it-is-registered-727486/