21 7 23
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறையின் உச்சக்கட்டமாக இளம்பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், இளம்பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் வரும் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
source https://tamil.indianexpress.com/india/dmk-has-announced-a-protest-against-the-incident-in-manipur-726883/