மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்தக் கோரி திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளன.
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான காணொலி வெளியானது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே (ஜூலை 20)மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடிய போது அதே பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளன. மாநிலங்களவையில் திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதேபோல மக்களவையில் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.
source https://news7tamil.live/manipur-issue-dmk-congress-notice-to-debate-in-parliament.html