ஞாயிறு, 23 ஜூலை, 2023

மணிப்பூர் வீடியோ விவகாரம்: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்!

 

மணிப்பூரில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.22 7 23

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த மே மாதம் இருபெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய இந்த கொடும் சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், மாதர் சங்கத்தினர், மற்றும் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக பலவிதமான போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

மணிப்பூரில் நடைபெறும் வன்முறை சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதியை கண்டித்தும் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய மாதர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய 

source https://news7tamil.live/manipur-issue-reverberates-demonstration-in-various-parts-of-tamil-nadu.html