வெள்ளி, 21 ஜூலை, 2023

பொது சிவில் சட்டம்:

 

Uniform Civil Code, UCC, BJP view on UCC, rss on ucc, பொது சிவில் சட்டம், சுதந்திரத்திற்குப் பின் பாஜக, ஆர் எஸ் எஸ், பாஜக ஆர் எஸ் எஸ் நிலைப்பாடு எப்படி மாறியது, BJP election manifesto, demand for UCC, Arjun Ram Meghwal, express explained, Tamil indian express
பொது சிவில் சட்டம்: சுதந்திரத்திற்குப் பின் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாடு எப்படி மாறியது

பா.ஜ.க-வின் முக்கிய அரசியல் திட்டங்களில் ஒன்றாக பொது சிவில் சட்டம் காணப்பட்டாலும், அக்கட்சியும் அதற்கு முன்பு இருந்த பாரதிய ஜனசங்கமும் அதை எப்போதும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் சேர்க்கவில்லை. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பல ஆண்டுகளாக பொது சிவில் சட்டம் குறித்து எடுத்துள்ள நிலைப்பாட்டை இங்கே பார்க்கலாம்.

நாடாளுமன்றத்தில் சட்ட ஆணையம் பொது சிவில் சட்டத்தின் பொருத்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் இந்த விஷயத்தில் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் காரணமாக புதிய ஆலோசனைகளை தொடங்கியுள்ளது என்று அரசாங்கம் வியாக்கிழமை கூறியது.

பொது சிவில் சட்டத்தின் முறைகள் குறித்த கேள்விக்கு, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ராஜ்யசபாவில் கூறுகையில், சட்டக் குழு இன்னும் ஆலோசனைகளை நடத்தி வருவதால், “இந்த கட்டத்தில் அதன் முறைகள் பற்றிய கேள்வி எழவில்லை” என்று கூறினார்.

பா.ஜ.க-வின் முக்கிய அரசியல் திட்டங்களில் ஒன்றாக பொது சிவில் சட்டம் காணப்பட்டாலும், அக்கட்சியும் அதற்கு முன்பு இருந்த பாரதிய ஜனசங்கமும் (BJS) பொது சிவில் சட்டத்தை எப்போதும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் சேர்க்கவில்லை. பா.ஜ.க மற்றும் அதன் கருத்தியல் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) பல ஆண்டுகளாக பொது சிவில் சட்டத்தில் எடுத்துள்ள நிலைப்பாட்டை இங்கே பார்க்கலாம்.

சுதந்திரத்துக்குப் பிறகான ஆண்டுகள்

ஜவஹர்லால் நேருவின் முதல் அரசாங்கம் இந்து கோட் மசோதாவைக் கொண்டு வந்தபோது, பாரதிய ஜனசங்கம் ஏப்ரல் 15, 1955 அன்று கர்நாடகாவின் கோகாக்கில் அதன் மத்திய செயற்குழுவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. “வாக்காளர்களிடம் இருந்து எந்த ஆணையையும் பெறாமல் பொதுக் கருத்தை மீறி இருக்கும் இந்த மசோதாவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். இப்படியான சர்வாதிகார முறையில் செயல்பட வேண்டாம்” என்று பாரதிய ஜனசங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியது.

“அனைத்து குடிமக்களுக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் உத்தரவிடும்போது”, இந்து சட்ட மசோதா “ஒரே ஒரு சமூகத்தைப் பொறுத்த வரையில் பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது” என்று பாரதிய ஜனசங்கத்தின் செயற்குழு கூறியது.

இந்து வாரிசு மசோதாவில், பாரதிய ஜனசங்கம் அக்டோபர் 23, 1955-ல், “கடுமையான ஆட்சேபனை தெரிவித்தது. முக்கியமாக சட்டவிரோதமா பிறந்த குழந்தைகள் என தெரிந்திருந்தால் அவர்களின் தந்தையுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படுவார்கள் மற்றும் முறையான குழந்தைகளுக்கு சமமான நிலையில் வைக்கப்படுவார்கள். இந்த மசோதா ஆண் வாரிசுகளை விட பெண் வாரிசுகளை சிறந்த நிலையில் வைத்துள்ளது; சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அதிக பங்குகளை வழங்கி உள்ளது” என்றும் பாரதிய ஜனசங்கம் கூறியது.

பாரதிய ஜனசங்கம் தனது 1957-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், தாங்கல் ஆட்சிக்கு வந்தால் இந்து திருமணச் சட்டம் மற்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்தது. இருப்பினும், அது பொது சிவில் சட்டம் குறித்து அமைதியாக இருந்தது.

1960 முதல் 1980 வரை

பாரதிய ஜனசங்கத்தின் 1962-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் இடம் பெறவில்லை. இருப்பினும், இந்து திருமணச் சட்டம் மற்றும் இந்து வாரிசுச் சட்டத்தை ரத்து செய்வதாக மீண்டும் உறுதியளித்தது. 1967-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, பாரதிய ஜனசங்கம் தனது தேர்தல் அறிக்கையில் “அனைத்து குடிமக்களுக்கும் திருமணம், வாரிசு மற்றும் தத்தெடுப்பு ஆகியவற்றிற்கானபொது சிவில் சட்டம்” என்று உறுதியளித்தது. இந்த வாக்குறுதி 1971-ல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 1977 மற்றும் 1980 தேர்தல்களில் இந்த வாக்குறுதி (ஜனதா கட்சியாக மாறிய பின்) காணவில்லை.

இருப்பினும், திருமணம், வாரிசு மற்றும் தத்தெடுப்பு ஆகியவற்றை நிர்வகிக்கும் பொது சிவில் சட்டத்தின் தேசியக் கொள்கையின் அவசியத்தை பாரதிய ஜன சங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது.

80-களில் பா.ஜ.க-வின் உருவாக்கம், ஷா பானோ வழக்கு

1980-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.க உருவாக்கப்பட்டது. அதன் 1984-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிடப்படவில்லை. லோக்சபாவில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க, அடல் பிஹாரி வாஜ்பாய் உட்பட அதன் தலைவர்கள் தோல்வியடைந்த தேர்தல் அது. எண்பதுகளின் மத்தியில், தேசிய அரசியலில் காலூன்றப் போராடி, எல்.கே. அத்வானி தலைவராக இருந்தபோது, ​​பா.ஜ.க பொது சிவில் சட்டம், சட்டப்பிரிவு 370 ரத்து, மற்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் ஆகிய மூன்று முக்கிய அரசியல் திட்டங்களில் கருத்து எதுவும் இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது.

ஷா பானோ வழக்கிற்குப் பிறகு – 1985 இல் உச்ச நீதிமன்றம் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கியது. ஆனால, அடுத்த ஆண்டு ஒரு சட்டத்தின் மூலம் தீர்ப்பை மத்திய அரசு ரத்து செய்தது – பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் பொது சிவில் சட்டம் தேவை என்ற கோரிக்கையை மிகவும் வலுவாக எழுப்பத் தொடங்கின.

1986 ஆம் ஆண்டு அதன் அகில பாரதிய பிரதிநிதி சபாவில் (ABPS), ஷா பானோ வழக்கின் பார்வையில், ஆர்.எஸ்.எஸ், “நமது அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளபடி பொது சிவில் சட்டத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, இந்த மசோதா (ஷா பானோ வழக்கு) தேசிய நீரோட்டத்தில் சேரவிடாமல் ஒரு பிரிவினரை சீல் வைத்து நாட்டை ரிவர்ஸ் கியரில் வைத்துள்ளது.” என்று கூறியது.

1989 தேர்தலில், பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில், “நாட்டில் நடைமுறையில் உள்ள பல்வேறு தனிநபர் சட்டங்கள் – இந்து சட்டம், முஸ்லிம் சட்டம், கிறிஸ்தவ சட்டம், பார்சி சட்டம், சிவில் சட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய ஒரு கமிஷனை நியமிப்பதாக உறுதியளித்தது. இந்தச் சட்டங்களில் உள்ள சமமான கூறுகள், பொது சிவில் சட்டத்திற்கான ஒருமித்த கருத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு வரைவைத் தயாரிக்கும்” என்று தெரிவித்தது.

1990-க்குப் பிறகு: கூட்டணி ஆட்சிக் காலம்

1991 லோக்சபா தேர்தலில், பா.ஜ.க கூறியது, “நமது குடிமக்களுக்கு ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வழங்குவதற்காக நாடு முழுவது பொது சிவில் சட்டத்தை உருவாக்க, பண்டைய, இடைக்கால மற்றும் நவீன பல்வேறு சிவில் சட்டங்களை ஆய்வு செய்ய ஒரு சட்ட ஆணையத்தை நியமிப்போம்.” என்று கூறியது.

பா.ஜ.க, எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் மீண்டும், மீண்டும் இந்த பிரச்னையை எழுப்பினர். ஆகஸ்ட் 6, 1993-ல் சுமித்ரா மகாஜன், “அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவின் நோக்கங்களை அடையவும், நாட்டின் அனைத்து குடிமக்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை மேம்படுத்தவும் ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என்று அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இது ஆகஸ்ட் 20 மற்றும் டிசம்பர் 10, 1993-ல் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அல்மோராவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-யான பச்சி சிங் ராவத், டிசம்பர் 20, 1996-ல் பொது சிவில் திருமணம் மற்றும் விவாகரத்து மசோதா என்ற தலைப்பில் தனி உறுப்பினராக மசோதாவை அறிமுகப்படுத்தினார். அதை நிறைவேற்ற முடியவில்லை.

1995-ம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ்-ன் அகில பாரதிய செயற்குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. “நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பொது சிவில் சட்டம் குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சட்டத்தை இயற்றுவதற்கான இயக்கத்தில் சட்டமன்ற இயந்திரத்தின் செயல்முறையை அமைக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அவர்களின் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் வலியுறுத்தியது.”

1996-ம் ஆண்டில், பா.ஜ.க தேர்தல் அறிக்கையில், “பாலின சமத்துவத்தை உறுதி செய்வதோடு, ஒவ்வொரு சமூகத்திற்கும் பொருந்தும் மற்றும் பொதுவான பாரதிய அடையாளத்தை வளர்க்கும் பொது சிவில் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். பிற்போக்குத்தனமான தனிநபர் சட்டங்கள் சட்டப்பூர்வ அதிகாரத்தை நிறுத்திவிடும்.” என்று கூறியது.

1998-ல், பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில், “அனைத்து மரபுகளிலிருந்தும் முற்போக்கான நடைமுறைகளின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை உருவாக்க சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்” என்று உறுதியளித்தது.

இருப்பினும், என்.டி.ஏ கூட்டணியின் ஒரு பகுதியாக அது ஆட்சிக்கு வந்த சட்டப்பிரிவு 370, ராமர் கோவில் மற்றும் பொது சிவில் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை ஒதுக்கி வைத்தது.

1999-ல், பா.ஜ.க தேர்தலுக்கு முந்தைய கூட்டணியான என்.டி.ஏ-வின் ஒரு பகுதியாக போட்டியிட்டது. அப்போது அக்கட்சிக்கு சொந்தமாக தேர்தல் அறிக்கை இல்லை. ஆனால், என்.டி.ஏ-வின் ஒரு நிகழ்ச்சி நிரலில் அது பொது சிவில் சட்டம் மற்றும் பிற சர்ச்சைக்குரிய விஷயங்களைக் குறிப்பிடவில்லை.

2004 லோக்சபா தேர்தலில் என்.டி.ஏ-வின் தலைமைக் கட்சியாக பா.ஜ.க போட்டியிட்ட போது அதே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டன.

இருப்பினும், சங்பரிவார் தலைவர்கள், குறிப்பாக வி.எச்.பி-யின் அசோக் சிங்கால் போன்றவர்கள், அவ்வப்போது பொது சிவில் சட்டம் பிரச்னையை எழுப்பினர்.

2000-களுக்குப் பிறகு, ‘மோடி அலை’க்கு மத்தியில்

2009-ல், அத்வானி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டபோது, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை, “சிறந்த மரபுகளைப் பின்பற்றி, அவற்றை நவீன காலத்திற்கு ஒத்திசைத்து, பொது சிவில் சட்டத்தை உருவாக்க ஆணையம் அமைக்கப்படும். இஸ்லாமிய நாடுகள் உட்பட பிற நாடுகளில் உள்ள பாலின சமத்துவத்திற்கான சீர்திருத்தங்களையும் ஆணையம் ஆய்வு செய்யும்” என்று கூறியது.

2014-ம் ஆண்டில், நரேந்திர மோடி பிரதமராக முன்னிறுத்தப்பட்டபோது, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை, சிறந்த மரபுகளை உருவாக்கி நவீன காலத்திற்கு ஏற்றவாறு பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கான தனது நிலைப்பாட்டை பா.ஜ.க மீண்டும் வலியுறுத்தியது. 2019-க்கான அதன் ‘சங்கல்ப் பத்ரா’விலும் இதே வரி மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

source https://tamil.indianexpress.com/explained/uniform-civil-code-how-the-bjp-rss-position-has-changed-since-independence-726628/