செவ்வாய், 25 ஜூலை, 2023

கர்நாடக அணைகளில் இருந்து 12,500 கன அடி நீர் திறப்பு: மாநில அரசு அதிரடி

 24 7 23

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 12500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.
மேலும், கபினி அணையில் இருந்து 2500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்தத் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “கர்நாடக மாநில மக்களின் தேவைக்கு போகவே நீர் திறக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.
மேலும் கர்நாடக அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவும் குறைந்து காணப்படுகிறது. அந்தப் பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரிக்கப்படும்பட்சத்தில் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.



source https://tamil.indianexpress.com/tamilnadu/release-of-12500-cubic-feet-of-water-from-karnataka-dams-728405/

Related Posts: