திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மணிப்பூரில் மூன்று மாதங்களாக இன்று வரை வன்முறை நடந்து வருகிறது. ஆனால் அதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பாஜக வெற்றி பெற்றது போல, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
200க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் பலவித தாக்குதலுக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். பெண்கள் சீரழிக்கப்பட்ட செய்தி உலகத்தையே குலுங்க வைத்திருக்கிறது.
இது போன்ற சூழ்நிலைகள் இருதரப்பிற்கு அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அங்கு ரெண்டு இன்ஜின் ஆட்சி தான் நடைபெறுகிறது. வன்முறை நீடிப்பதை ஏன் அனுமதிக்கிறார்கள். அங்குள்ள ரெண்டு பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவதற்காக பாஜக இப்படி அனுமதித்திருக்கிறார்கள் என்ற கருத்தும் உருவாகி இருக்கிறது.
குஜராத் போன்ற நிலை மணிப்பூரில் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். இதன் மூலம் அரசியல் தேவைகளை நிறைவேற்ற விரும்புகிறார்கள். மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் புது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீதும் டி. ஜி. பி மீது வழக்கு தொடுக்க கவர்னர் அனுமதிக்கவில்லை.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி மீது விரைந்து பாய்ந்த அமலாக்கத்துறை, முன்னாள் அமைச்சர்கள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
குறிப்பாக குட்கா வழக்கில் அனைத்து ஆதாரங்கள் இருந்தும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை. அமலாக்கத்துறை பாகுபாடாக செயல்பட கூடாது.
பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது.
2024ல் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து சட்டங்களும் மாற்றி எழுதப்படும், எனவே, தான் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று கூடி இருக்கின்றன.
எதிர் கட்சிகள் இந்தியா என்று அணிக்கு பெயர் வைத்தவுடன் மோடி புதிய இந்தியா என பெயர் வைத்துள்ளார். அது புதிய இந்தியா அல்ல, புதைக்குழியில் தள்ளிய இந்தியா என்று தான் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறினால் மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. ஏன் அவர் வருவதில்லை. வெளிநாடுகளுக்கு செல்கிறார், அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஆனால் இந்திய பாராளுமன்றத்திற்கு விவாதத்திற்கு தயாராக இல்லை.
எனவே மணிப்பூர் சம்பவத்திற்கு மோடி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும், அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். மணிப்பூரில் பாஜக அரசு தொடரக்கூடாது குடியரசு ஆட்சி ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
எனவே தான் ஜனநாயகத்தை காக்கும் வகையில் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளோம்.
இருகம்யூனிஸ்டுகள் சேர்ந்து மணிப்பூர் சென்று விட்டு வந்து அறிக்கை கொடுத்திருக்கிறது அதன் அறிக்கை அடிப்படையில் நாடு முழுவதும் நாளை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
டெல்டா பாசன விவசாயத்திடற்காக கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட சாத்தியம் கிடையாது. தமிழக அரசு அனுமதியின்றி கட்ட முடியாது.
மகளிர் காண உரிமை தொகையில் குறைபாடு இருக்குமானால் அதனை முதல்வர் சரி செய்ய வேண்டும். ருசி கண்ட பூனை போல குஜராத்தில் எப்படி கலவரத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றார்களோ அதுபோலத்தான் மணிப்பூரிலும் செய்ய துடிக்கிறது.
அதனால் தான் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. ஆர். எஸ். எஸ் தடை செய்ய வேண்டி இயக்கம் தான். தனியார் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது. ஆர். எஸ். எஸ் ஒரு வன்முறை கும்பல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அமைப்பு. ஹிட்லர் உடைய கொள்கையை கடைப்பிடிக்கும் இயக்கம்.
தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வரன்முறை செய்ய வேண்டும்.
ஒப்பந்த முறையில் பணிக்கு விடும் முறை கைவிட வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது திருச்சி மாவட்ட செயலாளர் சிவா, ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
24 7 23
source https://tamil.indianexpress.com/tamilnadu/mutharasan-met-reporters-in-trichy-728302/