தமிழ்நாட்டிற்கு உரிய நீர் வழங்கப்படும், எங்களிடம் இருப்பில் உள்ள நீரை திறந்து விட முடிவு செய்துள்ளோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்சநீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையை பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடுசெய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிட உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார். அதில், காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்கிற தமிழ்நாட்டின் கோரிக்கையை மதிக்கிறோம். எங்களிடம் இருப்பில் உள்ள நீரை திறந்து விட முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு உரிய நீர் வழங்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
source https://news7tamil.live/tamil-nadu-will-be-given-adequate-water-we-have-decided-to-release-the-existing-water-karnataka-deputy-chief-minister-d-k-sivakumar.html