சனி, 22 ஜூலை, 2023

6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு; தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் போது குறைந்த மழைப்பொழிவால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வடகிழக்கு பருவமழையின்போது குறைவான மழைபொழிவால் பாதிக்கப்பட்ட வேளாண் வறட்சிப் பகுதிகளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

21 7 23

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 01.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் குறைவான மழைப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாகப் பயிர்கள் வாடியதைத் தொடர்ந்து, 33% மற்றும் அதற்கு மேல் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளானதால் 25 வட்டாரங்கள் மிதமான வேளாண் வறட்சியால் பாதிப்புக்கு உள்ளானதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரங்களும், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய வட்டாரங்களும் ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார் கோவில், பரமக்குடி, ஆர்.எஸ். மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை ஆகிய வட்டாரங்களும் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய வட்டாரங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி வட்டாரமும் விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்கள் மிதமான வேளாண் வறட்சியால் பாதிப்புக்கு உள்ளானதாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-announced-25-blocks-in-6-districts-as-agricultural-drought-areas-726938/