புதன், 26 ஜூலை, 2023

உங்க வீட்டில் இ.பி இணைப்பு எண் மாற்ற இந்த ஆவணங்களை ரெடி பண்ணுங்க!

 25 7 23

தமிழ்நாட்டில் உள்ள மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், சென்ற 24ஆம் தேதி முதல் மாநிலம் முழுக்க மின்சார நிலையங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன

இந்த மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் மற்றும் வேறு ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் மக்கள் இந்த நாளில் இலவசமாக செய்யலாம்.
இதற்கு ஆதார் அட்டை இதற்கு கண்டிப்பாக அவசியம். ரேஷன் அட்டை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நகராட்சி, மாநகராட்சி பகுதி என்றால் சொத்து வரி செலுத்திய ஆவணம் அவசியம்.

அதுவே இறந்தவர்கள் பெயரை நீக்கி வாரிசு பெயரை கொண்டு வர சொத்து பகிர்வு பத்திரம் அல்லது செட்டில்மெண்ட் பத்திரம் வேண்டும். பொது மினசாரத்திற்கு வீடுகளில் உள்ள எல்லோரின் கையெழுத்து கொண்ட ஆவணம், சொத்து வரி பத்திரங்கள் அவசியம்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/let-us-know-the-documents-required-to-change-name-in-electricity-connection-728978/

Related Posts: