திங்கள், 24 ஜூலை, 2023

சென்னை ஐகோர்ட் சுற்றறிக்கை அதிர்ச்சி தருகிறது; விரைவில் போராட்டம்: திருமாவளவன்

 23 7 23

Thirumavalavan said that a protest will be held soon against the circular of the Chennai High Court Registrar
விசிக எம்.பி. தொல். திருமாவளவன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் தமிழ் கவிஞர் திருவள்ளுவர் உருவப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கையில் கூறியுள்ளது.
இந்த சுற்றறிக்கை ஜூலை 7 சுற்றறிக்கை அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில், “தேசியத் தலைவர்களின் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவங்கள், உராய்வுக்கு வழிவகுத்தன” மற்றும் பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எழுந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “திருவள்ளூவர், மகாத்மா காந்தி சிலை அல்லது படம் மட்டும் வைக்க வேண்டும். அம்பேத்கரின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என சுற்றறிக்கை கூறுகிறது.

பதிவாளரின் இந்த சுற்றறிக்கை உள்நோக்கம் கொண்டது, கண்டனத்துககுரியது என்றார்.
மேலும், 3 ஆண்டுகள் அல்லும் பகலும் பாராமல் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்தார். ஆகவே அவரது சிலை அல்லது படம் நீதிமன்றத்தில் இருப்பது என்பது பொருத்தமானது” என்றார்.

தொடர்ந்து, விரைவில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.
இந்த நிலையில், தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கையில் இருந்து அண்ணல் அம்பேத்கருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-said-that-a-protest-will-be-held-soon-against-the-circular-of-the-chennai-high-court-registrar-727692/