சனி, 22 ஜூலை, 2023

நவாப் கால Masjid இடிக்க அயோத்தி நகர அதிகாரிகள் நெருக்கடி; ஐகோர்ட்டில் வக்ஃபு வாரியம் வழக்கு

 Ayodhya 18th-century mosque minaret demolition; case in HC Tamil News

Masjid  இடிப்பு நோட்டீஸ்களை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மசூதி கமிட்டி மனு தாக்கல் செய்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் 6 வழிச் சாலையை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால், சாலையோரங்களில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களை இடித்து பொதுப்பணித் துறை (PWD) நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அயோத்தியில் உள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷியா முஸ்லீம் Masjid ன் (மினாரா) கோபுரத்தை இடிக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

லக்னோ – அயோத்தி நெடுஞ்சாலையில் உள்ள ஷஹாதத்கஞ்ச் பகுதியை அயோத்தி நகரின் நயா காட் உடன் இணைக்கும் ராம் பாத், சாலையின் 3 மீட்டர் நீளத்தை குத்ரி பஜாரில் Masjid அமைந்துள்ளது. இதன் கோபுரம் (மினாரா) அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மசூதியை சேதப்படுத்தாமல் இருக்க பீம் கட்டவும், பின்னர் மினாரை அகற்றவும் பள்ளிவாசல் அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மசூதி இடிப்பு நோட்டீஸ்களை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மசூதி கமிட்டி மனு தாக்கல் செய்தது. ஷியா வக்பு வாரியம், அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவற்றிடம் இருந்து பதில் கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது, ​​மார்ச் 3 அன்று இந்த மனு முதலில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெஞ்ச், ஏப்ரல் 21ம் தேதியை அடுத்த விசாரணை நாளாக அறிவித்தது.

அனைத்து தரப்பினரின் பதில்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மசூதி குழுவின் சட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் வழக்கறிஞர் இன்டெசார் ஹுசைன் தெரிவித்தார். “அந்த மனுவில், மசூதி ஒரு வரலாற்று கட்டமைப்பாக உள்ளது என்றும், அது ஷியா முஸ்லீம் மக்களின் சின்னம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தோம். மினாரை இடிக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த வழக்கு கடந்த மார்ச் 3ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், கால அவகாசம் காரணமாக விசாரணை நடைபெறவில்லை. நாங்கள் விரைவில் நீதிமன்றத்தில் தேதியை கோருவோம்”என்று ஹுசைன் கூறினார்.

மசூதி பராமரிப்பாளர் பர்வேஸ் ஹுசைன் நேற்று வியாழக்கிழமை கூறுகையில், உ.பி. ஷியா வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட மசூதியின் ஒரு பகுதியை இடிக்க நிர்வாகம் மசூதி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. சர்வேயின் போது, ​​ராமர் பாதையில் காணப்படும் மினாராவை இடிக்குமாறு நிர்வாகம் எங்களிடம் பலமுறை கூறி வருகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு, அவர்கள் மினாராவை அகற்ற வேண்டும் என்று சொன்னார்கள், ”என்று ஹுசைன் கூறினார்.

மசூதி கமிட்டி அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த கட்டிடம் 1750ல் நவாப் மெஹ்தி ஹசன் கான் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. “கடந்த ஆண்டு டிசம்பரில், நாங்கள் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. ஷியா முஸ்லீம் மக்கள் இங்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்கிறார்கள்.

வளாகத்தின் ஒரு பகுதியாக இருந்த சில கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கான இழப்பீட்டை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால் மசூதி ஒரு பழமையான கட்டிடம் மற்றும் ஷியா முஸ்லீம் மக்களிடத்தில் முக்கியத்துவம் உள்ளதால், அதன் பகுதி இடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, ”என்று ஹுசைன் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் அயோத்தி நகர ஆணையருக்கு மசூதி கமிட்டி எழுதிய கடிதத்தில், மசூதிக்கு வடக்கே சில நசுல் (அரசு) நிலம் இருப்பதாகவும், மினாராவை இடிப்பதில் இருந்து காப்பாற்றுவதற்காக சாலை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தலாம் என்றும் கூறியிருந்தனர்.

உ.பி ஷியா வக்ஃப் வாரியத்தின் தலைவர் அலி ஜைதி, Masjid வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். “இந்த விவகாரம் கொஞ்ச காலமாக நடந்து வருகிறது. Masjid  குழு நீதிமன்றத்தை அணுகியுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/ayodhya-18th-century-mosque-minaret-demolition-case-in-hc-tamil-news-726697/