தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விரைவில் தொடங்க உள்ள நிலையில், எஸ்.சி பிரிவு மாணவர்களுக்கான கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைகான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது அதற்கான, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் எஸ்.சி பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் இருக்கும் என கிளாசிக் நீட் அகாடமி யூடியூப் சேனலில் டாக்டர் பெரியசாமி முழுமையாக விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், தமிழ்நாடு மருத்துவ சேர்க்கை வாரியம் வெளியிட்டுள்ள சீட் மேட்ரிக்ஸ் படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எஸ்.சி பிரிவினருக்கு 610 இடங்கள் உள்ளன. இதனால் எஸ்.சி பிரிவினருக்கு கட் ஆஃப் 455 ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சிலர் சென்றால், கட் ஆஃப் 451 ஆக குறைய வாய்ப்புள்ளது.
எஸ்.சி பிரிவுக்கு கல்லூரி வாரியான கட் ஆஃப் விவரம்
1) மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை – 591
2) ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை – 569
3) கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை – 556
4) ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை – 545
5) மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை – 538
6) கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் – 538
7) செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு – 527
8) தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் – 527
9) அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் – 520
10) கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி – 515
11) அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர் – 508
12) திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி – 508
13) வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் – 506
14) விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் – 500
15) அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு – 497
16) இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை – 497
17) தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி – 492
18) தேனி மருத்துவக் கல்லூரி, தேனி – 489
19) அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் – 488
20) திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை – 486
21) தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி – 484
22) கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம் – 482
23) கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி – 478
24) திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் – 477
25) கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர் – 473
26) புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை – 470
27) சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை – 470
28) அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் – 464
29) அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி – 464
30) அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி – 464
31) அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் – 462
32) அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 462
33) அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் – 460
34) அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் – 459
35) அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் – 457
36) அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் – 457
37) அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி – 455
source https://tamil.indianexpress.com/education-jobs/neet-counselling-2023-tamil-nadu-govt-medical-colleges-sc-community-mbbs-expected-cut-off-details-727363/