பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் 2018ஆம் ஆண்டு பரவிய தகவலை, நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, தேசியக் கொடி அவமதிப்பு வழக்கும் அவர் மீது தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றம் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தது. இது அருவருக்கதக்க செயல் என எஸ்வி சேகரை கண்டித்திருந்தது.
இந்த நிலையில், இன்று வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உயர் நீதிமன்ற நீதிபதி,
தவறான, அவதூறான கருத்து கூறிவிட்டு உடனே மன்னிப்பு கோரிவிட்டால் தனது செயல்பாடுகளில் தவறில்லை என்றாகிவிடுமா? எனக் கேள்வியெழுப்பினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/adjournment-of-judgment-in-sv-shekhar-case-720354/