எ.வ வேலு பேசியதை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியதை நீக்க வேண்டும் என டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், “பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்தி மோடி ஆகியோர் தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளார்.
எனவே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இந்தியா என்றால் வடக்கில் உள்ள ஒரு ஊர் என்று பேசியதுபோன்ற காணொலிகள் அண்மையில் வெளியாகின.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்நாட்டில் பல்வேறு தேசப் பக்தர்கள் இருக்கின்றனர்.
மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர். அப்துல் கலாம் என அந்தப் பட்டியல் நீளும். ஆனால் சிலர் இந்தியா என்றால் வடக்கில் உள்ள ஊர் எனவும் பேசுகின்றனர் என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/the-dmk-has-demanded-that-the-prime-ministers-speech-regarding-e-v-velu-be-removed-from-the-notes-of-the-house-737879/