2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 முதல் செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத நீட்டிப்பு, சிறந்த திட்டமிடல் மூலம் வரியை சேமிக்க விரும்புவோருக்கு நிவாரணம் அளிக்கிறது.
உங்கள் முதலீடுகள், வருவாய்கள் மற்றும் பிற வகையான வருமானங்களுக்கான வரி சேமிப்பு குறித்த தகவல்களை இப்போது பார்ப்போம். ஆனால், புதிய வரி முறைக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக் கடன் வட்டிக்கு வரி விலக்கு
நீங்கள் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், வருமான வரி பிரிவு 24 (பி) ன் கீழ் செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். வருமான வரி விதிகளின் படி, நீங்கள் 2 லட்சம் வரை வட்டி செலுத்துவதில் வரி விலக்கு பெறலாம். சொத்து உங்கள் பெயரில் இருந்தால் மட்டுமே இந்த வரி விலக்கு கிடைக்கும்.
வீட்டுக் கடனின் அசல் தொகையைப் பெறுதல்
வீட்டுக் கடனின் அசல் கட்டணத்தில் பிரிவு 80C இன் கீழ் நீங்கள் வரி விலக்கு பெறலாம். இருப்பினும், இந்த வரம்பு 1.5 லட்சத்தை தாண்டக்கூடாது. எனவே பிரிவு 80C க்கு கீழ், உங்கள் மீதமுள்ள விலக்குகள் 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், வீட்டுக் கடனின் அசல் தொகையிலிருந்து இந்த வரம்பை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் வரி விலக்கு கோரலாம்.
எல்ஐசி பிரீமியம், பிஎஃப், பிபிஎஃப், ஓய்வூதிய திட்டம்
வருமான வரி பிரிவு 80 சி கீழ் அனைத்து வரி விலக்குகளையும் பெறுவீர்கள். உதாரணமாக, நீங்கள் எல்ஐசியின் பாலிசியை எடுத்திருந்தால், அதன் பிரீமியத்தை நீங்கள் கோரலாம். வருங்கால வைப்பு நிதி, பிபிஎஃப், குழந்தைகள் கல்விக் கட்டணம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், வீட்டுக்கடன் ஆகியவற்றில் 80 சி கீழ் வரி விலக்கு பெறலாம். நீங்கள் பிரிவு 80CCC இன் கீழ் எல்ஐசி அல்லது வேறு எந்த காப்பீட்டு நிறுவனத்தின் வருடாந்திர திட்டத்தை (ஓய்வூதிய திட்டம்) வாங்கியிருந்தால், நீங்கள் வரி விலக்கு கோரலாம். நீங்கள் பிரிவு 80 CCD (1) ன் கீழ் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தை வாங்கியிருந்தால், நீங்கள் அதில் விலக்கு கோரலாம். இவை அனைத்தையும் சேர்த்து வரி விலக்கு 1.5 லட்சத்தை தாண்டக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மத்திய அரசு ஓய்வூதிய திட்டம்
மத்திய அரசின் தேசிய பேமண்ட் திட்டத்தின் (NPS) ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், பிரிவு 80 CCD (1B) இன் கீழ் ரூ .50,000 கூடுதல் விலக்கு கிடைக்கும். பிரிவு 80 (சி) இன் கீழ் பெறப்பட்ட 1.5 லட்சம் வரி விலக்குக்கு மேல் இந்த விலக்கு கிடைக்கும். மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்திற்கு நிறுவனம் அளித்த பங்களிப்பை பிரிவு 80 CCD2 ன் கீழ் விலக்கு கோரலாம். அதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. முதலாவதாக, நிறுவனம் ஒரு பொதுத்துறை அலகு (PSU), மாநில அரசு அல்லது வேறு ஏதேனும் ஒரு நிறுவனமாக இருந்தாலும், விலக்கு வரம்பு சம்பளத்தின் 10 சதவீதமாகும். நிறுவனம், மத்திய அரசாக இருந்தால், விலக்கு வரம்பு சம்பளத்தில் 14% ஆக இருக்கும்.
சுகாதார காப்பீட்டு பிரீமியம்
நீங்கள் ஏதேனும் உடல்நலக் காப்பீட்டை எடுத்திருந்தால் அல்லது வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளைச் செய்திருந்தால், பிரிவு 80D இன் கீழ் நீங்கள் பிரீமியத்தை கோரலாம். அதன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் விலக்கு கோரலாம். உங்களுக்காக, உங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக நீங்கள் ஒரு சுகாதார காப்பீட்டுக் கொள்கையை எடுத்திருந்தால், நீங்கள் ரூ. 25,000 வரை பிரீமியம் கோரலாம். இதில், பெற்றோரின் வயது 60 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால், வரி விலக்கு வரம்பு 50,000 ரூபாய். 5000 ரூபாய் சுகாதார பரிசோதனையும் இதில் உள்ளது. இருப்பினும், வரி விலக்கு சுகாதார காப்பீட்டின் பிரீமியத்தை தாண்டக்கூடாது.
ஊனமுற்ற சார்பாளர்களின் மருத்துவ மற்றும் பராமரிப்பு செலவுகள்
உங்களைச் சார்ந்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கான செலவுகள் கோரப்படலாம். ஒரு வருடத்தில் நீங்கள் ரூ .75,000 வரை கோரலாம். சார்ந்திருக்கும் நபர் 80 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் ஊனமுற்றவராக இருந்தால், மருத்துவ செலவுகளுக்கு ரூ .1.25 லட்சம் வரி விலக்கு கோரப்படலாம்.
மருத்துவ சிகிச்சை கட்டணங்களுக்கு வரி விலக்கு
வருமான வரி பிரிவு 80 DD (1B) ன் கீழ் உங்களுக்கு அல்லது உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கன குறிப்பிட்ட நோய் அல்லது மருத்துவ சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட கட்டணத்தில் ரூ .40,000 வரை விலக்கு கோரப்படலாம். அந்த நபர் மூத்த குடிமகனாக இருந்தால், இந்த வரம்பு ரூ .1 லட்சம் ஆகிறது.
கல்வி கடன் வட்டிக்கு வரி விலக்கு
கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு கோரலாம். இது வரம்பற்ற நன்மையாகும். வரி திருப்பிச் செலுத்தத் தொடங்கும் அதே ஆண்டு முதல் வரி உரிமை கோரல் தொடங்குகிறது. அதன் பலன் அடுத்த 7 ஆண்டுகளுக்கு கிடைக்கும். அதாவது, நீங்கள் மொத்தம் 8 ஆண்டுகளுக்கு வரி விலக்கு பெறலாம். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளின் கல்விக் கடனுக்கு வரி விலக்கு கிடைக்கும். இரண்டு குழந்தைகளுக்கு 10% வட்டி விகிதத்தில் 25-25 லட்சம் கடன் வாங்கப்பட்டால், ஆண்டு வட்டி மொத்தம் ரூ. 50 லட்சத்திற்கு 5 லட்சம் செலுத்த வேண்டும். இந்த முழுத் தொகைக்கும் வரிவிலக்கு கிடைக்கும்.
மின்சார வாகன கடன்
வருமான வரி பிரிவு 80EEB இன் கீழ், நீங்கள் ஒரு மின்சார வாகனம் வாங்க கடன் வாங்கியிருந்தால், நீங்கள் செலுத்தும் வட்டிக்கு ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இருப்பினும், இந்த வரி விலக்கு ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2023 க்கு இடையில் எடுக்கப்பட்ட கடன்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
வீட்டு வாடகை கட்டணம்
HRA உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், நீங்கள் பிரிவு 80GG இன் கீழ் வீட்டு வாடகை கட்டணத்தை கோரலாம். அதேநேரம், உங்கள் நிறுவனம் HRA கொடுத்தால், நீங்கள் 80 GG க்கு கீழ் வீட்டு வாடகை கோர முடியாது.
source https://tamil.indianexpress.com/business/income-tax-filing-these-10-facts-helps-to-you-can-save-upto-8-lakhs-328772/