வியாழன், 5 ஆகஸ்ட், 2021

ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்; அமைச்சர் ரகுபதி

 04 08 2021 ரம்மி மற்றும் போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து, 1930 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு கேமிங் சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த ஒரு நாள் கழித்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் மாநிலத்தில் இது போன்ற விளையாட்டுகள் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையைத் தொடர்ந்து, அப்போதைய ஆளும் அதிமுக அரசு நவம்பர் 21, 2020 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.” என்று கூறினார்.

மேலும் கூறுகையில், “ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் தனது கருத்துக்களை முன்வைத்தாலும், சட்டம் இயற்றப்பட்டபோது அரசாங்கம் போதுமான காரணங்களைக் குறிப்பிடவில்லை மற்றும் விதிகளை முறைப்படுத்தாமல், ஆன்லைன் கேமிங்கை தடை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.” என்றும் கூறினார்.

பொது நலன் முக்கியம் என்பதால், நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், தேவையான விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் காரணங்களை தெளிவாக வடிவமைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். “ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

செவ்வாய்க்கிழமை, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் முதல் பெஞ்ச் இந்த திருத்தத்தை ரத்து செய்து, ஜங்லீ கேம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் பலரின் பொதுநல மனுக்களை அனுமதித்தது.

“இந்த விளையாட்டுகளுக்கு பரந்த அளவிலான முழுத் தடையை விதிப்பதன் மூலம், குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய சோதனை மீறப்பட்டது மற்றும் அதன் மூலமான தடை, அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (g) இன் (எந்தத் தொழிலையும் மேற்கொள்ளும் உரிமை, அல்லது எந்தத் தொழிலை மேற்கொள்வது, வர்த்தகம் அல்லது வணிகம்), கீழ் வருகிறது ”என்று பெஞ்ச் கூறியது.

பெஞ்ச் மேலும் கூறியது, “தடைவிதிக்கப்பட்ட சட்டம் உறுதியற்ற மற்றும் பகுத்தறிவின்றி செய்யப்பட்ட ஒன்றாக கருதப்பட வேண்டும். இது அதிகப்படியான மற்றும் விகிதாச்சாரமற்றது … எனவே, இந்த திருத்தம் அரசியலமைப்பை மீறுவதால் முழுவதுமாக நீக்கப்பட்டது.

எவ்வாறாயினும், எந்தவொரு தடையும் இல்லாமல் மற்றொரு சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு நீதிமன்றம் சுதந்திரம் அளித்தது. மேலும் “… இந்த தீர்ப்பு எந்த விதத்திலும் மாநில அரசிற்கு உரிய அரசியலமைப்பு கொள்கைகளை எதிர்கொள்ளும் பொருத்தமான சட்டத்தை அறிமுகப்படுத்துவதைத் தடுக்காது.” என்றும் நீதிமன்றம் கூறியது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/legislation-ban-online-games-rummy-poker-tamil-nadu-law-minister-329263/