நீட் தேர்வை ரத்து செய்யும் நாள்தான் முழு வெற்றி, ஒவொருவரும் நீட் தேர்வு ரத்தாகும் வரை ஒவ்வொருவரும் போராட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆவடியில்
முன்னாள் அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி
செயளாலரும், இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு 1.10 கோடி ரூபாயை மாவட்ட செயலாளர் நாசர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதே போன்று தெற்கு ,மேற்கு மாவட்ட செயலாளர்களும் தலா 1 கோடி ரூபாய் நிதியை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
“திருவள்ளூர் மாவட்டம் தான் திராவிட இயக்கத்தின் தாய் வீடு. இந்த மாவட்டத்தின் முதன்மையான செயல் வீரர் ஆவடி நாசர் தான். மருத்துவத்தில் தமிழகத்தில் இருந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலும் நீட் தேர்வு வரவில்லை.
ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை சேர்ந்தவர்கள் பாஜகவை திருப்திபடுத்துவதற்காக மக்கள் விரோத நீட் தேர்வை நுழைத்தார்கள். அன்று அனிதா இறந்திருக்காவிடில் இன்று அவர் ஒரு மருத்துவராக இருந்திருப்பார். இன்று 01.09.2023 அவரது நினைவு நாள்.
அனிதாவிலிருந்து தற்போது குரோம்பேட்டை ஜெகதீஸ் வரை 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். தேர்தல் வாக்குறுதி கொடுத்தது போல் நீட் அகற்ற முழு முயற்சி மேற்கொள்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்யும் நாள்தான் முழு வெற்றி, ஒவொருவரும் உதயநிதியாக மாறி இறங்கி போராட வேண்டும்.
மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. அதில் அதிமுகவின் வரலாறு குறித்து
பேசப்பட்டதா என்று கேட்டால் இல்லை. ஆடல், பாடல் நகைச்சுவை தான் நடந்தது.
இப்படி ஒரு மாநாடு சமூக வரலாற்றில் இது வரும் நடந்ததே கிடையாது. ஒரு
மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு உதாரணமாக தான் அந்த மாநாடு நடைபெற்றது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
source https://news7tamil.live/everyone-should-fight-till-neet-is-abolished-minister-udayanidhi-stalins-speech.html