செவ்வாய், 2 ஏப்ரல், 2024

மத்திய அரசின் ரைசிங் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் (பி.எம் - ஸ்ரீ - PM-SHRI) திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 தமிழ்நாடு, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் மத்திய அரசின் ரைசிங் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் (பி.எம் - ஸ்ரீ - PM-SHRI) திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் மத்திய அரசின் பிரதான் மந்திரி பள்ளிகள் (PM-SHRI) திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

பி.எம் - ஸ்ரீ (PM-SHRI) திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத ஒரு யூனியன் பிரதேசம் டெல்லி, மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு, 2023-24- ஆண்டிற்கான மத்திய அரசின் முதன்மையான சமக்ரா சிக்ஷா (உலகளாவிய கல்வி) திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதை நிறுத்துவதாக மத்திய அரசு கூறிய சில நாட்களுக்குப் பிறகு, இந்த மாநிலங்கள் பி.எம் - ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொள்வதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மார்ச் 15-ம் தேதி தமிழ்நாடு கல்வி அமைச்சகத்திற்கும், மார்ச் 22-ம் தேதி ஒடிஷாவிற்கும், மார்ச் 30-ம் தேதி கேரளாவிற்கும் கடிதம் எழுதியதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“கேரளாவில் பி.எம் - ஸ்ரீ பள்ளிகளை தொடங்குவதற்கு அம்மாநிலம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, பொதுக் கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது, என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சஞ்சய் குமாருக்கு, கேரள பொதுக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.  “கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கு முன்னர் பி.எம் - ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசால் கையெழுத்திடப்படும்” என்று  தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், “2023-24 நிதியாண்டிற்கு அனுமதிக்கப்பட்ட 37.5% நிதியை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கேரள அரசு கூறியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகிய இரு மாநிலங்களும் அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாக உறுதியளித்துள்ளன. மேலும், 2023-24 நிதியாண்டின் தவணைகளை வெளியிட மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம், பி.எம் - ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொலைநோக்கு முடிவை எடுத்ததற்காக கேரள அரசாங்கத்தை பாராட்டியது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டியது. அந்த பதிவில், “கேரள அரசுக்கும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துக்கும் இடையிலான இந்த கூட்டுறவு வலுவான மத்திய-மாநில உறவுகளை குறிக்கிறது. பள்ளிக் கல்வியை வலுப்படுத்தவும், கேரளாவில் மாணவர்களின் விரிவான வளர்ச்சியை உறுதி செய்யவும் நம்முடைய கூட்டு அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்பதால், இந்த முயற்சியை நாங்கள் ஆர்வத்துடன் ஆதரிக்கிறோம்,” என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

இதுவரை, 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பி.எம் - ஸ்ரீ திட்டத்திற்காக மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.இந்த திட்டத்தின் மூலம் 14,500 பள்ளிகளை 1.8 மில்லியன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்தி, இந்தப் பள்ளிகளை முன்மாதிரி நிறுவனங்களாகச் செயல்படுவதை உறுதிசெய்து, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் உணர்வை உள்ளடக்கியுள்ளது. முதல் சுற்றில் மேம்படுத்துவதற்காக 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6,448 பள்ளிகளை அரசு தேர்வு செய்துள்ளது.

இந்த மூன்று மாநிலங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் மட்டுமே பி.எம் - ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் மாநிலங்களின் வரிசையில் இருக்கும்.


source https://tamil.indianexpress.com/india/pm-shri-scheme-tamil-nadu-kerala-odisha-adopt-union-education-ministry-officials-4443660