கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்ட விடுகள் சேதமானது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காகவும் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் தமிழகத்தில் இருந்து ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது,, வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தார். இந்த சம்வபம் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்த தமிழக செவிலியர் சபீனாவுக்கு வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்க உள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்தமைக்காக கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
15 08 2024
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-announce-kalpana-chawla-award-to-nurse-sabeena-for-work-in-wayanad-landslide-rescues-6857321