திங்கள், 10 ஆகஸ்ட், 2026

பொறியியல் படிப்பில் சேர மேலும் ஒரு நல்வாய்ப்பு: ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம்

 Tamil Nadu engineering admissionst

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான பொதுக் கலந்தாய்வு செயல்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொறியியல் பொதுக் கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விண்ணப்பப் பதிவை தொடர்ந்து, தகுதியான மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கத் தவறிய மற்றும் வாய்ப்பை இழந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. மாணவர்கள் இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி, உரிய இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, பொறியியல் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.



source https://tamil.indianexpress.com/education-jobs/engineering-admissions-supplementary-opportunity-for-unapplied-students-applications-open-from-august-17-12245942