/indian-express-tamil/media/media_files/2026/08/07/flags-2026-08-07-21-51-09.jpg)
2024-2025 நிதியாண்டில் மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.365.78 கோடி நன்கொடை பெற்று தி.மு.க முதலிடத்திலும், ரூ.66.30 கோடியுடன் அ.தி.மு.க ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
2024-2025 நிதியாண்டில் மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.365.78 கோடி நன்கொடை பெற்று தி.மு.க முதலிடத்திலும், ரூ.66.30 கோடியுடன் அ.தி.மு.க ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் உள்ள மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்) வெளியிட்டுள்ளது. இதில் 2024-2025 நிதியாண்டில் ரூ.365.78 கோடி நன்கொடை பெற்றுத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய அரசியல் கட்சிகள் பெறும் நிதி மற்றும் நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்) ஆண்டுதோறும் நிதி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024-2025 நிதியாண்டில் மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2023-2024-ம் நிதியாண்டில் மாநிலக் கட்சிகள் மொத்தமாக பெறப்பட்ட நன்கொடைத் தொகை ரூ.347.693 கோடியாக இருந்த நிலையில், 2024-2025-ம் நிதியாண்டில் இது பெருமளவு உயர்ந்து ரூ.1,051.556 கோடியாக அதிகரித்துள்ளது.
அதிக நன்கொடை பெற்ற முதல் 10 மாநிலக் கட்சிகள்:
தி.மு.க : ரூ.365.78 கோடி
திரிணமூல் காங்கிரஸ் : ரூ.184.96 கோடி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (ஒய்.எஸ்.ஆர்.சி.பி): ரூ.140.04 கோடி
தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி): ரூ.83.04 கோடி
அ.தி.மு.க : ரூ.66.30 கோடி
பிஜு ஜனதா தளம் : ரூ.60 கோடி
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்): ரூ.33.23 கோடி
ஜனசேனா கட்சி : ரூ.25.33 கோடி
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு): ரூ.18.69 கோடி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்): ரூ.15.23 கோடி
பிற கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம்:
சி.பி.ஐ : ரூ.9.016 கோடி
எஸ்.டி.பி.ஐ : ரூ.3.54 கோடி
நாம் தமிழர் கட்சி : ரூ.2.87 கோடி
தே.மு.தி.க/ பிற : ரூ.0.50 கோடி
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/state-political-parties-donations-adr-report-dmk-tops-with-365-crores-12240446





