23 08 2026
/indian-express-tamil/media/media_files/2026/08/22/mekedatu-dam-controversy-puducherry-2026-08-22-21-16-55.jpg)
மேகதாது அணைக்கு எதிராக தனிநபர் தீர்மானம்: புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. மனு
கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர் வே. கார்த்திகேயன், தற்காலிக சபாநாயகரிடம் இன்று மனு அளித்துள்ளார்.
தனது மனுவில், கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்டினால், காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர உரிய அனுமதி வழங்க வேண்டும். மேலும், இந்தத் தீர்மானத்தை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அரசு முறைப்படி நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் தனது மனுவில் எம்.எல்.ஏ. வே. கார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/opposition-to-mekedatu-dam-dmk-mla-moves-private-member-resolution-in-puducherry-assembly-12416650





