புதன், 12 ஆகஸ்ட், 2026

குழந்தையை வளர்க்க இந்த நாடு தான் பெஸ்ட்... முதலில் பிரிஸ்பேன்; இந்தியா லிஸ்டில் எந்த இடம் தெரியுமா?

 


india

2026-ஆம் ஆண்டில் குடும்பத்துடன் வாழ்வதற்கும், குழந்தைகளை வளர்ப்பதற்கும் உலகிலேயே மிகச் சிறந்த நகரங்கள் எது என்பது குறித்த ஆய்வறிக்கையை 'கம்பேர் தி மார்க்கெட் ஆஸ்திரேலியா' (Compare the Market AU) அமைப்பு வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு, மகிழ்ச்சிக் குறியீடு, குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள், மாதாந்திர வாழ்க்கைச் செலவு, பெற்றோர் விடுப்பு, தடுப்பூசி விகிதம், கல்விச் செலவு மற்றும் பசுமை நிலப்பரப்பு ஆகிய 9 முக்கியக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 10 புள்ளிகள் அடிப்படையில் இந்த ஆய்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தைப் பிடித்த பிரிஸ்பேன் 

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. குறைந்த வாழ்க்கைச் செலவு, சிறந்த பொதுச் சேவைகள் மற்றும் மிதமான காலநிலை ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகும். இங்குள்ள நதிக்கரைப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் குழந்தைகளுக்குப் படிப்பைத் தாண்டிய சிறந்த அனுபவத்தைத் தருகின்றன.

லண்டன், ஐக்கிய இராச்சியம் (புள்ளிகள்: 5.992)

உலகின் மிகச் சிறந்த கல்வி மற்றும் கலாச்சார மையமாக லண்டன் திகழ்கிறது. புகழ்பெற்ற பள்ளிகள், வரலாற்றுச் சின்னங்கள், இலவச அருங்காட்சியகங்கள், பரந்த நகர்ப்புறப் பூங்காக்கள் மற்றும் சிறந்த போக்குவரத்து வசதிகள் லண்டனின் பலங்களாகும்.

ஆக்லாந்து, நியூசிலாந்து (புள்ளிகள்: 5.460)

கடற்கரைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளால் சூழப்பட்ட ஆக்லாந்து, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வழங்குகிறது. இங்குள்ள அமைதியான சூழலும் வெளிப்புறப் பொழுதுபோக்குகளும் பெற்றோரைக் பெரிதும் கவர்கின்றன.

ஹெல்சிங்கி, பின்லாந்து (புள்ளிகள்: 5.305)

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உலகளவில் மதிக்கப்படும் கல்வி முறையைக் கொண்டுள்ளது பின்லாந்து. மன நலனுக்கும் சீரான கற்றலுக்கும் முக்கியத்துவம் தரும் இங்குள்ள பள்ளிகளும், பாதுகாப்பான நகரமைப்பும் குழந்த சுதந்திரமாக இயங்க உதவுகின்றன.

சிட்னி, ஆஸ்திரேலியா (புள்ளிகள்: 5.239)

பெருநகர வாய்ப்புகளையும் கடற்கரை வாழ்வியலையும் ஒருசேர வழங்குகிறது சிட்னி. உயர்தர வாழ்க்கை முறை, வேலைவாய்ப்புகள் மற்றும் கடற்கரைச் சுற்றுலாக்கள் குழந்தைகளுக்குச் சிறந்த அனுபவத்தை தருகின்றன.

டெல்லியின் நிலை (புள்ளிகள்: 4.591)

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி, பழமையான பாரம்பரியத்தையும் வேகமான நகர்ப்புற வளர்ச்சியையும் கொண்டு விளங்குகிறது. விரிவடைந்து வரும் கல்வித் துறை, வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் ஆண்டு முழுதும் நடைபெறும் கலாச்சார விழாக்கள் டெல்லியின் சிறப்பம்சங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

source https://tamil.indianexpress.com/international/the-best-major-cities-to-raise-a-family-in-2026-read-full-story-12251102