/indian-express-tamil/media/media_files/2026/08/28/hrce-board-temple-2-2026-08-28-04-59-03.jpg)
இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்ட 34,971 திருக்கோயில்கள் குறித்த ஆகம அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்ட 34,971 திருக்கோயில்கள் குறித்த ஆகம அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்துகள், திருத்தங்கள் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
26 8 2026
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆகமவிதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட 5 நபர்கள் கொண்ட குழுவின் பரிசீலனை அறிக்கை தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2025 அக்டோபர் 16 அன்று பணியைத் தொடங்கிய இக்குழு, மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளைப் பரிசீலனை செய்தது. இதில் மொத்தம் பரிசீலிக்கப்பட்ட 34,971 திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் விடுதல்கள் அல்லது மாற்றங்கள் ஏதேனும் இருப்பின், அறிவிப்பு வெளியான 25.08.2026 முதல் 30 நாட்களுக்குள் தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
அறநிறுவனங்கள் மற்றும் திருக்கோயில்கள் பரிசீலனைத் தொகுப்பு விவரம்
இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி ஆளுகைக்குட்பட்ட 46,341 அறநிறுவனங்களில் குழுவினால் பரிசீலிக்கப்பட்ட விவரங்களின் தொகுப்பு பின்வருமாறு:
வரிசை எண் விவரம் மொத்தம்
1 துறையின் நேரடி ஆளுகைக்குட்பட்ட மொத்த அறநிறுவனங்களின் எண்ணிக்கை 46,341
2 குழுவினால் பரிசீலனை செய்ய வேண்டியதில்லை என முடிவு செய்யப்பட்ட அறநிறுவனங்கள் (காவல் தெய்வம், மடம், பஜனை மடம், ஜெயின் திருக்கோயில்கள், ஜீவ சமாதி போன்றவை) 8,521
3 இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத கட்டளைகள் 2,514
4 துறை தலையீடு தொடர்பான வழக்கு உள்ள திருக்கோயில்கள், நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் இதர பணிகளுக்காக அப்புறப்படுத்தப்பட்ட திருக்கோயில்கள் 335
5 குழுவினால் பரிசீலிக்கப்பட்ட மொத்த திருக்கோயில்களின் எண்ணிக்கை 34,971
6 பரிசீலிக்கப்பட்டவைகளில் ஆகமம் பின்பற்றப்படுகின்ற திருக்கோயில்கள் 7,461
7 பரிசீலிக்கப்பட்டவைகளில் ஆகமம் பின்பற்றப்படாத திருக்கோயில்கள் 27,510
மாவட்ட வாரியாக பரிசீலிக்கப்பட்ட திருக்கோயில்களின் விவரங்கள்
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் பரிசீலிக்கப்பட்ட திருக்கோயில்களின் முழுமையான பட்டியல்:
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/08/28/chatgpt-image-2026-08-28-05-05-02.png)
பொதுமக்கள் கருத்துகள் சமர்ப்பிக்கும் முறை
வெளியிடப்பட்டுள்ள திருக்கோயில் விவரங்களில் ஏதேனும் விடுதல்கள் அல்லது கருத்துருக்கள் இருந்தால், பொதுமக்கள் 30 நாட்களுக்குள் தங்களது கருத்துகளைத் தபால் மூலமாகவோ அல்லது அறநிலையத்துறை இணையதளத்தின் மாவட்ட வாரியான பட்டியலிலும் நேரடியாகத் தேர்ந்தெடுத்தோ பதிவு செய்யலாம்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை,
எண். 119, உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 600034. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-hrce-agama-temples-list-published-public-feedback-12446007





