வியாழன், 20 ஆகஸ்ட், 2026

பூமி ஏன் இவ்வளவு சூடாகிறது? காற்று மாசுபாட்டை விட ஆபத்தாக மாறிய மேகங்கள்; புதிய ஆய்வில் பகீர் தகவல்

 source https://tamil.indianexpress.com/science/satellite-data-reveals-earths-energy-imbalance-the-surprising-role-of-cloud-behavior-diminishing-cloud-reflectivity-new-study-explains-rising-global-temperatures-12397004


Cloud density

பூமி ஏன் இவ்வளவு சூடாகிறது? காற்று மாசுபாட்டை விட ஆபத்தாக மாறிய மேகங்கள்; புதிய ஆய்வில் பகீர் தகவல்

பூமி ஏன் இவ்வளவு சூடாகிறது? இதற்கு நாம் இதுவரை சொல்லி வந்த ஒரே பதில் "காற்று மாசுபாடு மற்றும் தொழிற்சாலைப் புகை". ஆனால், சமீபத்திய ஆய்வுகள் புதிய அதிர்ச்சியைத் தந்துள்ளன. பூமியின் வெப்பத்தை அதிகரிப்பதில் காற்று மாசுபாட்டை விட 'மேகங்களின் மாற்றம்' (Cloud Behavior) தான் வில்லனாக உருவெடுத்துள்ளது.

பொதுவாக பூமி, சூரியனிடமிருந்து பெரும் வெப்ப ஆற்றலில் ஒரு பகுதியைத் தனக்குள்ளே வைத்துக்கொண்டு, மீதமுள்ளதை விண்வெளிக்குத் திருப்பி அனுப்பிவிடும். இது ஒரு பேலன்ஸ் ஷீட் போலச் சரியாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது பூமி வாங்கும் வெப்பம் அதிகமாகவும், திருப்பி அனுப்பும் வெப்பம் குறைவாகவும் உள்ளது. இதைத்தான் அறிவியல் மொழியில் 'எனர்ஜி இம்பேலன்ஸ்' (Energy Imbalance) என்கிறார்கள்.

சூரியனிடமிருந்து வரும் உக்கிரமான ஒளியைத் தடுத்து, அதைத் திருப்பி அனுப்பும் 'கண்ணாடி' போல மேகங்கள் செயல்படுகின்றன. ஆனால், கடந்த 20 ஆண்டு கால செயற்கைக்கோள் தரவுகளை ஆராய்ந்ததில் ஒரு பகீர் உண்மை தெரிந்துள்ளது. மேகங்களின் பிரதிபலிப்புத் திறன் (Reflectivity) குறைந்துவிட்டது. இதனால், சூரிய ஒளி மேகங்களைத் தாண்டி நேரடியாக பூமியின் மேற்பரப்பைச் சூடாக்குகிறது. இதற்குக் காரணம் காற்று மாசுபாடு அல்ல, புவி வெப்பமடைதலால் மேகங்களின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே ஆகும்.

ஏரோசால்கள் (Aerosols) எனப்படும் நுண்துகள்கள் வெப்பத்தை மாற்றும் என்று கருதப்பட்டது. ஆனால், உலக அளவில் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. இதற்கு ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது: வடக்கு நாடுகள் காற்று தூய்மையாக்கப்படுவதால் மேகங்கள் மெலிதாகி, அதிக சூரிய ஒளி உள்ளே நுழைகிறது (வெப்பம் அதிகரிக்கிறது). தெற்கு நாடுகளில் அதிகப்படியான காட்டுத்தீ, எரிமலை வெடிப்புகளால் ஏரோசால்கள் அதிகரித்து, மேகங்கள் அதிக ஒளியைத் திருப்பி அனுப்புகின்றன (குளிர்ச்சி அடைகிறது).

இந்த 2 மாற்றங்களும் ஒன்றை ஒன்று 'பேலன்ஸ்' செய்துவிடுவதால், ஒட்டுமொத்தப் புவி வெப்பமடைதலுக்குக் காற்று மாசுபாடு ஒரு முக்கியக் காரணியாக தெரியவில்லை. பசுமை இல்ல வாயுக்கள் ஒருபுறம் வெப்பத்தை அதிகரித்தாலும், மேகங்கள் செய்யும் தலைகீழ் மாற்றங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல வெப்பத்தை இன்னும் பல மடங்கு வேகப்படுத்துகின்றன. 2003 முதல் 2023 வரை, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு சதுர மீட்டருக்கு அரை வாட் (0.5W) கூடுதல் வெப்பத்தை பூமி உறிஞ்சி வருகிறது.