வயிற்றில் பல்வேறு தொல்லைகளை ஏற்படுத்தும், நாடாப்புழுக்களால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இயற்கையான மூலிகை மருந்துகள் மூலம் எளிமையாக போக்கலாம். கொஞ்சம் நீரில் சிறிதளவு மாதுளை மரவேரை தட்டிப்போட்டு சுண்டக்காய்ச்சி தினமும் அரை கப் சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள் வெளியேறும்.
கீழாநெல்லி இலைகளை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கஷாயம் இறக்கி, அந்த கஷாயத்தை ஒரு நாளைக்கு மூன்று வேளை அரை டம்ளர் வீதம் மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், சீதபேதி குணமாகும்.
மலச்சிக்கல் தீர இரவில் மாம்பழம் சாப்பிட வேண்டும். அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்தினால் மலச்சிக்கல் நீங்கும். செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
குடல்புண்ணுக்கு அகத்திக்கீரை நல்ல நிவாரணம் தரும். மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.
நாயுருவிச் செடியின் விதைகளை இடித்துப் பொடி செய்து உட்கொண்டால் நுரையீரல் நோய்கள் குணமாகும். சர்க்கரை நோயின் தீவிரத்தை குறைக்க, வாழைத்தண்டை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அதனுடன் நீர் சேர்த்து வடிகட்டி, அதனை தொடர்ந்து அருந்தி வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கும்.