(சூறாவளிக்) காற்று, மழை மேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப் படுவார்கள்.) மழை பொழிந்து விட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களை விட்டு நீங்கி விடும்; மகிழ்ச்சி வந்துவிடும். நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, "அது என் சமுதாயத்தார் மீது சாட்டப்பட்ட(இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்'' என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது "(இது இறைவனின்) அருள்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: முஸ்லிம் (1639)