செவ்வாய், 20 அக்டோபர், 2015

சவுதி அரேபியா இஸ்ரேலுக்கு விடுத்திருக்கும் கடும் எச்சரிக்கை


அண்மையில் இஸ்ரேல் பொலிஸ் பிரிவு மஸ்ஜிதுல் அக்‌ஷாவிற்க்குள் நுழைந்து அங்கிருந்த பொது மக்களைத் தாக்கிய விடயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த விடயத்தைக் கண்டித்து சவுதி மன்னன் ஸல்மான் தனது கடும் எதிர்ப்பை இன்று தெரிவித்துள்ளார்.




அவர் தொலைபேசியூடாக பராக் ஒபாமா, டேவிட் கமேரோன் மற்றும் விலாடிமின் புடின் ஆகியோரைத் தொடர்பு கொண்டு இந்த தாக்குதல் சம்பந்தமாக உடனடித் தீர்வைப் பெற்றுத் தருமாறு வேண்டியுள்ளார். அவ்வாறில்லையென்றால் இந்த விடயத்தில் சவுதி அரசாங்கம் நேரடியாக தலையிட்டு இதற்க்கு ஒரு முடிவைக் கட்டப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.




அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனையும் தொடர்பு கொண்டு முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தளமாகக் கருதப்படும் மஸ்ஜிதுல் அக்‌ஷாவையும் அதனைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களையும் இஸ்ரேலிய பொலிஸிடமிருந்து பாதுகாத்துத் தருமாறு வேண்டியுள்ள அதே சமயம், அப்படி இல்லையென்றால் அங்கே மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்பட இதுவே ஒரு காரணமாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசைத் தொடர்பு கொண்டு மஸ்ஜிதுல் அக்‌ஷா இருக்கும் பகுதிக்கு பலத்த பாதுகாப்பை ஏற்படுத்துமாறும் வேண்டிக் கொண்டுள்ளார்.