வியாழன், 22 அக்டோபர், 2015

இரண்டு தலித் குழதைகள் எரித்துக் கொல்லப்பட்டது பற்றி மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே சிங் கருத்து இது:

காஸியாபாத்தில் இரண்டு தலித் குழதைகள் எரித்துக் கொல்லப்பட்டது பற்றி மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே சிங் கருத்து இது:
”யாரவது ஒரு நாயின் மீது கல்லெறிந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பல்ல ”
*
தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக ஒரு இஸ்லாமியர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து இது:
“மிகைப்படுத்தப்பட்ட சிறிய சம்பவங்கள் இந்துக் கலாச்சாரத்தை சேதப்படுத்த முடியாது.நாடு எப்போதும் ஒன்று பட்டு நிற்கும்”.
*
தலித் குழந்தைகள் கொல்லப்படுவது நாய்கள் கொல்லப்படுவதற்கு நிகரானது என்று சொல்வதற்கு ஒரு அரசு
இஸ்லாமியர்கள் படுகொலை செயயப்படுவதை சிறிய சம்பவங்கள் என வர்ணிப்பதற்கு அரசின் பின்னால் இருக்கும் இன்னொரு நிழல் அரசு
இதையெல்லாம் நியாயப்படுத்திப் ஒலிக்கும் ஊளைச் சத்தங்கள்.
இதுதான் இருண்ட காலம் என்று முன்னரே தெரியும்
ஆனால் அது இவ்வளவு இருட்டானது என்று தெரியாது

Ahamed Navavi's photo.