திங்கள், 26 அக்டோபர், 2015

ஆஃப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம்: 50-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு


ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நில நடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகளின் மேற்கூரைகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்துள்ளன.


இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகள் தொடர்வதால், உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்த தகவல் முழுமையாக வெளியாகவில்லை.