சனி, 17 அக்டோபர், 2015

முழு இரவையும் பிளாட்பாரத்தில் கழிக்க நேர்ந்த அந்த முகம் தெரியாத..பெயர் தெரியாத சிறுவனே..

Abu Rayyan's photo.
மன்னித்துவிடு...தம்பி
முழு இரவையும் பிளாட்பாரத்தில் கழிக்க நேர்ந்த அந்த முகம் தெரியாத..பெயர் தெரியாத சிறுவனே..
உனக்கும் என்மக்னையொத்த வயதுதான் இருக்கக்கூடும்.என் மகனைப்போலவே உனக்கும் அது மிகச்சிறிய ஆசைதான்.
என் மகனுக்கு விஜய்யை சந்திக்கவேண்டுமென்ற ஆசை இருப்பதைப்போல,உனக்கும் சல்மான்கானை சந்திக்கவேண்டும் என ஆசை இருந்ததில் தப்பொன்றும் இல்லை.ஆனால் அந்த ஆசை நிறைவேற வேண்டுமெனில் நீ பாகிஸ்தானில் பிறந்திருக்கக்கூடாது.
அதிலும் குறிப்பாக இஸ்லாமியக்குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடாது.என் செய்ய..பிறந்து தொலைத்துவிட்டாய். அப்படித்தான் பிறந்தாயே...இப்படி ஆசைப்படாமலாவது இருந்தாயா..?
அதுவுமில்லை...ஆசைப்பட்டுவிட்டாய்.உன் ஆசையை உன் பெற்றோரிடத்திலாவது சொல்லாமல் இருந்திருக்கலாம்.அதுவுமில்லை...சொல்லித்தொலைத்துவிட்டாய். உன் பெற்றோர்களுக்காவது புத்தி இருக்கவேண்டாமா..??
பிள்ளையின் ஆசையை நிறைவேற்றிவைக்க..இப்படியா கிளம்பி எங்கள் நாட்டிற்கு வருவது...என் செய்ய..வந்து தொலைத்துவிட்டீர்கள். வந்தவர்கள் எங்காவது மூத்திரச்சந்தில் ஒட்டப்பட்டிருக்கும் சல்மான்கானின் போஸ்டரை பார்த்துவிட்டு திரும்பிப் போயிருக்கவேண்டும்...
ஆனால் மதச்சார்பற்ற நாடென்று நம்பி வந்துவிட்டீர்கள்.அப்படித்தான் வந்தீர்களே.. எங்காவது ஓரமாய் ஒதுங்கியிருந்துவிட்டு போயிருக்கக்கூடாதா... மும்பையில் அறை எடுத்து தங்க ஆசைப்படலாமா..?? எங்களூரில் இப்போது முஸ்லீமேனியா வியாதி தாக்கி லாட்ஜ்காரனுங்கல்லாம் அரண்டு போய்கிடக்காங்க.
அட..போனதுதான் போனீங்க..மாறுவேஷத்துலயாவது போயிருக்கலாமில்லையா...ஒருநாளில்லை...நீங்க ஒருவருஷம் அலைஞ்சிருந்தாக்கூட முஸ்லீம்களுக்கு...அதுவும் பாகிஸ்தானியர்களுக்கு இங்கே அறை தரமாட்டோம் என்ற ஐநா விதியையாவது படிச்சித்தொலச்சிருக்கக்கூடாதா..?
சரி...ரயில்பிடித்து ஊருக்கு போய்டலாம்னு சரியான முடிவை எடுத்தீங்களே.. அதை பகலிலாவது எடுத்திருக்கக்கூடாதா...ராத்திரி நேரத்தில் நாய்கள்கூட பிளாட்பாரத்தில் தங்கலாம்..நீங்கள் தங்கமுடியாதென்ற விதி உங்களுக்கு தெரியாமல் போனதென்ன..?
ரயிலடிக்கு வெளியே சாலையோர பிளாட்பாரத்தில் ஒரு முழு இரவையும் கழித்தீர்களே...கடுங்குளிர் காலமாச்சே..எப்படி தாங்கிக்கொண்டாய் மகனே...?
எனக்குத்தெரியும் என் மகனைப்போலவே நீயும் குளிரை தாங்கிக்கொள்ளமுடியாமல் ராத்திரி முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்திருப்பாய்...
மன்னித்துவிடு...தம்பி...எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை...மனித நாகரீகத்தின் வேர்கள் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
மன்னித்து விடு..தம்பி
# சத்தியமாக மோடியின் இன்றைய இந்தியா இத்தனை கொடூரமானது என எங்களுக்கு தெரியாது....
நிச்சயம் மாட்டுக்காரி தின்னுருப்பார்கள் என்று குற்றம் சாட்டி என்னை குடும்பத்தோடு அடித்து கொல்லாமல் விட்டார்களே அதுவரை எனக்கு மகிழ்ச்சிதான் அண்ணா
- பாகிஸ்தான் சிறுவன்