இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பருப்பு வகைகளின் விலை அதிகரித்து வரும் நிலையில்,இந்தியாவை ஒட்டியுள்ள பிற தெற்காசிய நாடுகளில் பருப்பு வகைகளின் விலை கட்டுக்குள் இருக்கிறது.
பாகிஸ்தானில் ஒரு கிலோ ரூ 70க்கும்,நேபாளில் ஒரு கிலோ ரூ 68க்கும்,பங்களாதேஷில் ரூ 65க்கும், இலங்கையில் ரூ 64க்கும் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் இந்தியாவில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ 200க்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலை வாசிப் பிரச்னையால் நடுத்தரக் குடும்பங்கள் முதல் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் வரை அவதியுற்று வருகிறார்கள்.
பருப்பு வகைகளின் விலை அதிகரிப்புக்கு மாநில அரசுகளே காரணம் என மிக சர்வ சாதாரணமாக கூறி வரும் மத்திய அரசு, பருப்பு விலைக் கடுப்பாட்டை கொண்டு வர இதுவரையில் எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்பது மக்களிடையே பெரும் குறையாக உள்ளது.