வெள்ளி, 23 அக்டோபர், 2015

நாங்கள் ஏன் தவ்ஹீத் ஜமாத்தை விரும்புகிறோம்?


இங்கே பண உதவியும் இல்லை பதவியில் பிரயோஜனமும் இல்லை வார்டு கவுன்சிலராக கூட நிற்க முடியாது பொறுப்புகளில் இருப்பவர்கள் தான் சொந்தக்காசை செலவு பண்ண வேண்டும் குடிக்க முடியாது சினிமா பார்க்க தடை சிகரெட் அடிக்க தடை தொண்டர்களுக்கு நிகராக தலைவர்களும் போஸ்ட் ஒட்டணும் தலைவன் பேசுற போது கைதட்ட கூடாது விசிலடிக்க கூடாது சொந்தக்காரனா இருந்தாலும் வரதட்சணை கல்யாணத்துக்கு போக கூடாது இன்னும் கணக்கில் அடங்கா கட்டுப்பாடுகள் ஏராளம் தனி மனித சுதந்திரத்தை தடுக்கிறது இருந்தும் விரும்புகிறோம் காரணம் தான் என்ன?
பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத அமைப்பில் வெறிகொண்ட ஒரு ஈர்ப்பு அது எங்களின் சுயநலமா இல்லை சில வருடங்களுக்கு முன்பு சுன்னத் ஜமாத்தினரும் தப்லீக் ஜமாத்தினரும் சொல்வதே மார்க்கம் பெரியார்களும் இமாம்களும் சொல்வதே வழிமுறை குரான் ஹதீஸ்கள் என்றாலே அமல்களின் சிறப்புகள் என்ற அபத்தமான ஒரு கப்சா நூல் தான் என்றே எங்கள் மனதில் பதிந்திருந்த நேரம் தப்லீக் ஜமாத்தினரின் தவ்ஹீத் ஜமாத் மற்றும் பீஜேவுக்கு எதிரான பொய்யான இட்டுக்கட்டிய அவதூறுகளை கண்மூடித்தனமாக நம்பி சகோ பீஜேவை சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் நானே பலமுறை அர்ச்சனை செய்துள்ளேன் அந்த அளவுக்கு மரமண்டையாக வாழ்ந்த எங்கள் உள்ளத்தில் தவ்ஹீத் என்னும் வார்த்தை லேசாக தட்டியது அதில் என்ன உள்ளது என்று ஆராயவே முதலில் இறங்கினோம் ஒருவர் மீது தொடர்ந்து அவதூறுகள் யூதக்கைகூலி இஸ்லாமியர்களின் ஒற்றுமையை கெடுக்கிறார் என்று சொல்லப்படுகிறதே என்று இறங்கி ஒவ்வொன்றாக ஆராய ஆராய தினம் தினம் ஒரு புது வழிமுறை தெரிகிறது அதில் நாங்கள் சென்றுவிட்டால் பலபேர் டவுசர் கழண்டு விடும் என்பதால் அது முற்றிலும் வழிகேடான கொள்கை என்று தப்லீக் ஜமாத்தின் பொய்யான பிரச்சாரம் தீவிரமாகியது அப்போது தான் மனம் யோசித்தது நாம் இறங்கும் வரை பக்கத்தில் வராத தப்லீக் ஜமாத் இறங்கிய உடன் அவசரகதியில் இப்படியொரு பிரச்சாரம் செய்ய என்ன காரணம் என்று அதிகம் அதிகம் ஆராய தொடங்கினோம் தப்லீக் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கைகளின் அபத்தங்கள் ஒவ்வொன்றாக விளங்க ஆரம்பித்தது சத்தியமும் எது என்று புரிய ஆரம்பித்தது தவ்ஹீத் என்பதை அமைப்பாக நினைத்து தொடங்கிய பிறகு தான் இது ஒரு கொள்கை என்பது விளங்கியது விளையாட்டாக நாங்கள் தொடங்கிய இந்த அமைப்பு எங்கள் வாழ்க்கையின் விளக்கமாகவும் எங்கள் இருளின் ஒளியாகவும் மாற ஆரம்பித்தது முதல் ஒன்றரை வருடம் அமைப்பு ஆரம்பித்த புதுதில் ஊதாரியாக சுற்றிய எங்களை ஒவ்வொரு படிப்பினையை கொடுத்து பொறுப்புள்ளவர்களாக மாற்ற ஆரம்பித்தது பெருமைக்காக அமைப்பை தொடங்கிய நாங்கள் மறுமைக்காக வாழவேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொடுத்தது அமைப்பு தொடங்கி சிறிது காலத்திற்குள் குரான் ஹதீஸை பற்றிய தொடர் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு செய்ய உந்துதல் ஏற்பட்டது அதன் விளைவு இன்று இமாம்களிடமும் மௌலானாக்களிடமும் தப்லீக் ஜமாத்தினரிடமும் அவர்கள் சொல்லும் குரான் ஹதீஸில் எது ஸஹீ எது ஃலைப் என்றும் குரானின் வசனங்களை எடுத்துப்போட்டு அவர்கள் சொல்வது மார்க்கமல்ல நபிகளார் சொன்னதே மார்க்கம் என்று இமாம்களையே திணறடிக்கும் அளவுக்கு மார்க்கத்தை விளங்க வைத்துள்ளான் தப்லீக் ஜமாத்தினரை பார்த்து ஓடி ஒளிந்த எங்களை பார்த்தாலே பத்து அடி தள்ளி போய் ஒளிந்து கொள்கிறான் தப்லீக் காரன் இவர்கள் கேள்விக்கு நம்மால் பதில் சொல்லமுடியாது என்று
இமாம்களிடமே குரான் ஹதீஸை சொல்லி நீங்கள் சொல்வது தவறு என்று சுட்டிகாட்டி இமாம்கள் சொல்வது மார்க்கமல்ல குரான் ஹதீஸே மார்க்கம் என்று அடையாளப்படுத்தியது
அல்ஹம்துலில்லாஹ்
இதுதான் தவ்ஹீதையும் தவ்ஹீத் ஜமாத்தையும் நாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட காரணம் மார்க்கமே தெரியாத மண்ணாங்கட்டியாக இருந்த எங்களை சகோ பீஜேவின் இஸ்லாம் ஓர் இனியமார்க்கமும் எளியமார்க்கமும் மார்க்க விளக்க பொதுக்கூட்டங்களுமே மார்க்கத்தை அறிய செய்தது அதனால் தான் சகோ பீஜேவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்
பின்பற்றவில்லை.
அல்லாஹ்வின் தூதர் வழிமுறைகளை மட்டும் பின்பற்றுவார்கள் நாங்கள்.