வியாழன், 29 அக்டோபர், 2015

சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்..!!

முகநூல் முஸ்லிம் மீடியா's photo.


மத்திய அரசின் உயரிய விருதான "பத்மஸ்ரீ" விருதை திருப்பி அளித்த பெண் எழுத்தாளர்...!!!
நாட்டில் நடக்கும் சகிப்புத்தன்மையினால் ஏற்படும் சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக பஞ்சாப் மாநில மூத்த பெண் எழுத்தாளர் தலீப் கவுர் தனக்கு வழங்கிய "பத்மஸ்ரீ" விருதை திருப்பி தந்துள்ளார்.
உத்திரபிரதேச மாநில தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தியை பரப்பி நூற்றுக்கணக்கான காவி பயங்கரவாதிகளால் முஹம்மமது இக்லாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்,
காவி பயங்கரவாதிகளால் கல்பர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் போன்ற பகுத்தறிவு சிந்தனையாளர்கள் படுகொலை சம்பவங்கள்.
இது போன்ற கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தொடர் தாக்குதலை கண்டிக்கும் விதமாக தனங்கு வழங்கிய மத்திய அரசின் உயரிய தனது "பத்மஸ்ரீ" விருதை திருப்பி அளித்துள்ளார்.
மேலும் இவர் தனக்கு வழங்கிய சாகித்ய அகாடமி விருதையும் ஏற்கனவே திருப்பி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சங்பரிவார பயங்கரவாதிகளால் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் மறக்க முடியாத சம்பவங்களான காந்தி படுகொலை,பாபர் மஸ்ஜித் இடிப்பு,குஜராத் இனப்படுகொலையை தொடர்ந்து தற்போது நடக்கும் சம்பவங்களால் உலக நாடுகள் இந்தியாவை காரி உமிழ வைத்துவிட்டது.