திங்கள், 26 அக்டோபர், 2015

உலகில் சமாதானம் நீடித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி

லிபிய அதிபர் கடாபி இராக் அதிபர் சத்தாம் அதிகாரத்தில் நிலைத்திருந்தால்
உலகில் சமாதானம் நீடித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி
=====================================
உலகில் அமெரிக்காவிர்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து இருமுகங்கள் காதாபியும் சதாமும் ஆவர்
இவ்விருவரையும் அமெரிக்க திட்டமிட்டு பழிதீர்த்தது அவ்விருவரின் மறைவிற்கு அந்த அந்த நாடுகளின் அரசியலே மாறி போனது
சதாமின் மறைவுக்கு பிறகு தான் இராக்கில் பயங்கரவாதம் படர்ந்து பரவியது
அது இராக்கோடு நின்றுவிடாமல் சிரியாவையும் ஏமனையும் அழித்தருக்கிறது
கதாபியின் ஆட்சி காலத்தில் வலுவான நாடாக திகழ்ந்த லிபியா அவரின் மறைவுக்கு பிறகு நிலைகுலைந்திருக்கிறது
இந்த இரு தலைவர்களும் அதிகாரத்தில் நிலைத்திருந்தால் உலகில் அமைதி இன்று நீடித்திருக்கும்
இப்படி கூறியிருப்பவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ஒபாமாவின் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹில்லாரியை எதிர்த்து போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப்
சிரியாவின் சோகங்களுக்கும் இராக் மற்றும் லிபியாவின் வீழ்ச்சிக்கும் ஒபாமா மற்றும் ஹிலாரியின் திறனற்ற நிர்வாகமே காரணம் என அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்