வெள்ளி, 30 அக்டோபர், 2015

குஜராத் போலிசின் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் #‎ஆண்ட்டிசிபேட்ரி_பெயில்‬..!


இஷ்ரத் ஜஹான் உட்பட ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் என்கிற 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட குஜராத் போலிசின் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் CBI மூலமாக உண்மை வெளிப்பட்டவுடன், "Gujarat Additional Director General of Police" என்ற மிக உயர்ந்த பதவியில் இருந்த P.P. Pandey திடீரென தலைமறைவானார்.
பின்னர் அவரை "தேடப்படும் குற்றவாளி" என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இன்னும் இரண்டு நாளுக்குள் கோர்ட்டில் வந்து சரணடைய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை கெடு விதிக்கப்பட்டதை அடுத்து... இன்று அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்..! எப்படி..?!?!?
டீக்காக பேன்ட் ஷர்ட் போட்டு நீட்டாக இன் பண்ணி பெல்ட் போட்டிருக்கும் அவர் நடந்து வந்திருந்தால்... அவரை புடிச்சி கைது பண்ணி சிறையில் தள்ளி விடுவார்கள் என்பதால்... ஆஸ்பத்திரியில் இருந்து... ஆம்புலன்ஸில் வந்து... இதோ... "இப்படி ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாக" வந்து சரணடைந்தார்..!
அடடே... இன்னிக்கி காலையில் அவருக்கு நெஞ்சுவலியாம்ங்க..! ஆளு... 'கிரிட்டிக்கல் கண்டிஷன்' என்று மெடிகல் ரிப்போர்ட்..! பரிதாபப்பட்ட நீதிபதி வேறு என்ன செய்வார்...? தந்தார்... ‪#‎ஆண்ட்டிசிபேட்ரி_பெயில்‬..!