புதன், 21 அக்டோபர், 2015

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு : தெலுங்கானா சட்டசபையில் அறிவிப்பு !


'KG' முதல் 'PG' வரை இலவசக் கல்வி!!
தெலுங்கானா மாநிலம் உதயமான பிறகு, முதல்முறையாக சட்டசபை-மேலவைகளின் கூட்டுக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவர்னர் உரையில், முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் நரசிம்மன் உரையின் முக்கிய அமசங்கள் வருமாறு:
முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
ரூ. 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி.
SC, ST பிரிவு மக்களின் முன்னேற்றத்துக்கு 1 லட்சம் கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்.
பிற்படுத்தப்பட்ட அனைத்து ஏழை மாணவர்களுக்கும் KG முதல் PG வரை இலவசக்கல்வி.
ஹைதராபாத் நகரை சர்வதேச தரம் வாய்ந்த நகராக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் உரையின் மீதான விவாதம் ஜூன் 12 வரை நடக்கும் என சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார்.