வியாழன், 22 அக்டோபர், 2015

"தாத்ரி சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது"

மாட்டுக்கறி உண்டதாகவும் சாப்பிட்டதாகவும்கூறி தாத்ரியில் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம், திட்டமிட்டு நடத்தப்பட்டது என இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.
Image copyrightAFP
Image captionவீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் சாப்பிட்டதாகவும் கூறி அக்லாக் அடித்துக்கொல்லப்பட்டார்.
முஹம்மது அக்லாக் அடித்துக்கொல்லப்பட்ட தில்லிக்கு அருகில் உள்ள பிசடா என்ற கிராமத்திற்கு தேசிய சிறுபான்மை ஆணையத்தைச் சேர்ந்த குழு ஒன்று இது தொடர்பாக விசாரிப்பதற்காகச் சென்றது.
இந்துக் கோவில் ஒன்றில் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என இந்த ஆணையம் கூறியிருக்கிறது.
திடீரென ஏற்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் இந்த சம்பவம் என பா.ஜ.க. அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவந்தனர்.
அக்லாக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மத சகிப்புத்தன்மை குறித்த பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என பிரதமர் மோதி கூறினார்.
விவசாயக் கூலியான அக்லாக், கடந்த மாதம் தன் வீட்டில் தன் மகனுக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, கத்திகள், பிஸ்டல்கள், கம்புகளுடன் வந்த ஒரு கும்பல் அவர்களைத் தாக்கியது.
9 பேரைக் கொண்ட அந்தக் குடும்பத்தினர் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
Image captionஅந்த கிராமத்துக் கோவிலில் செய்யப்பட்ட அறிவிப்பே பெரும் அளவில் ஆட்களைத் திரட்ட உதவியது என்கிறது அறிக்கை.
அக்லாக்கும் அவரது மகனும் செங்கலாலும் கம்புகளாலும் தாக்கப்பட்டனர். உதைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசம், அவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டது. ஆனால், பின்பு நடத்தப்பட்ட சதனைகளில் அது ஆட்டுக்கறி எனத் தெரியவந்தது.

"அறிவிப்பே காரணம்"

அக்லாக் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் இதற்கென இந்துக் கோவில் ஒன்று பயன்படுத்தப்பட்டது எனவும் இது குறித்து விசாரித்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வீட்டில் மாட்டுக்கறி இருந்ததாக செய்யப்பட்ட அறிவிப்பே இந்தத் தாக்குதலுக்கு தூண்டுதலாக இருந்தது என அந்த அறிக்கை கூறுகிறது.
பெரும்பாலான கிராமத்தினர் தூங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்லும் அந்த நேரத்தில் சில நிமிடங்களில் இவ்வளவு பேர் திரண்டது, முன்கூட்டிய திட்டமிடல் இதில் இருக்குமென்பதைக் காட்டுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையும் தனியாக விசாரணை ஒன்றை நடத்திவருகிறது.
இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில் 13 சதவீதத்தைக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள், இந்தியாவின் மிகப் பெரிய மதச் சிறுபான்மையினர் ஆவர்.