சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில்அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல் தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத்தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம்,உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக்காட்சிகள் முதலானவை மனஅழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்படுகின்றன.
இவைகளெல்லாம் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இவற்றில் செயல்வடிவில் உள்ள பிரச்சினைகள் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் புரியும்.இந் நோயியில் இருந்து நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும்? மன அழுத்தம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை தடை செய்ய கீழுள்ள ஆலோசனைகளை பின் பற்றுங்கள், அவை உங்களுக்கு உதவக்கூடும்.
.உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், உணர்வுகளைப் பற்றியும் நடந்தவைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக யாருடனாவது பேசுங்கள், உங்கள்குடும்ப அங்கத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ இது பற்றிக்கூறுவதற்கு விரும்பாவிட்டால் இதற்காக தகுந்த ஆலோசனைகள் வழங்கக்காத்திருக்கும் மனநிலை ஆலோசகரை அணுகலாம்.அப்போதுதான் உங்களுக்கு விடிவு கிடைக்கும்.நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியான விடயங்களை மீண்டும்செய்து பாருங்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். இந்த சக்தியூட்டும் செயற்பாடு உங்கள் பொது சுகாதாரத்தைப்பேணுவதோடு மன உழைச்சலைக்குறைக்கவும் உதவுகிறது.
உலகில் வாழும் அனைவருமே தங்கள் வாழ்நாளின் ஒரு முறையாவது தற்கொலை செய்யலாமா என்ற நிலைமைக்கு வருகின்றனர் என்று மனோதத்துவம் சொல்கிறது. இன்றைய வேகமான உலகத்திற்கு ஈடுகொடுத்து நாம்காரியங்களை செய்யும்போது மெல்ல மெல்ல நம்மை அமுக்கி மூழ்கடிக்கவரும் அரக்கனே மன அழுத்தம். இதை உடனே அடையாளம்கண்டுகொண்டு தீர்வு காண்பதன் மூலம்பெரும் இழப்புகளை தவிர்க்க முடியும்.
முதல்படி: சிறு பிரச்னைகளுக்கு கூடபெரிய அளவில் கவலைப்படுவதே மனஅழுத்தத்துக்கான முதல்படி. மனஅழுத்தத்தால் உடல், வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். ஒருவரின் தனித்தன்மை,முயற்சி, சக்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.
நல்லவர்களையும் முட்டாளாக்கும்: மனஅழுத்தம், நல்லஅறிவு படைத்தவர்களையும்,பழக்கவழக்கம், நடை, உடை,பாவனைகளில் முட்டாள்களாகக்காட்டுகிறது.ஒருவருக்கு உடலளவிலும், மனதளவிலும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உறவினர்கள், நண்பர்களிடமிருந்து பிரியும்நிலை உண்டாகிறது.
உணர்வற்ற மனிதனாக்கும்: மனித உணர்வில்,பாதிப்பை உண்டு பண்ணுகிறது.தேவையில்லாத இடங்களில், தேவையற்ற உணர்வுகளை வெளிப்படுத்தவைக்கிறது.சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை பிரித்துக்காட்டுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யாவிடில் மனநோய் அளவுக்கு கொண்டு செல்கிறது.
எவ்வாறு கட்டுப்படுத்துவது: அவசரஉலகில் மனஅழுத்தம் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுகிறது. என்னபிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழகவேண்டும். சிறு விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாமல், அதை சரி செய்யவேண்டும். சரி செய்ய முடியாத பிரச்னை எனில் ,அதையே நினைத்து கவலை கொள்ளக்கூடாது.
உடனே சரி செய்யுங்கள்: பிரச்னை ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும் போது, எண்ணத்தை மாற்றமுற்படுங்கள். நண்பர் களுடன்மனம்விட்டு பேசுங்கள். இதனால்அழுத்தம் குறையும். எளிய உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம்ஆகியவையே மனஅழுத் தத்துக்கு சிறந்தமருந்தாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் புதிய இடங்கள் ,சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் மனஅழுத்தத்தை மறந்து விடலாம்.