வெள்ளி, 23 அக்டோபர், 2015

லுத் அவர்கள் வாழந்த நகரம் கண்டுபிடிப்பு

குர்ஆன் கூறும் வரலாற்றை மெய்ப்பிக்கும் விதமாக
இறைதூதர் லுத் அவர்கள் வாழந்த நகரம் கண்டுபிடிப்பு
=======================================
குர்ஆனில் பெயர் குறிப்பிட படும் இறைதூதர்களில் லுத் நபி அவர்களும் ஒருவர்
இவர்கள் இப்றாஹிம் நபிஅவர்கள் காலத்தில் வாழ்ந்ததாக திரு குர்ஆன் குறிப்பிடுகிறது
இந்த நபியின் சமுதாயத்தவர் ஓரின சேர்க்கையில் நாட்டம் உள்ளவர்களாக வாழ்ந்தனர்
இவர்களை லுத் நபி அவர்கள் மூலம் இறைவன் கடுமையாக எச்சரித்தான்
இறைவனின் அறிவுரையை ஏர்க்க மறுத்த இந்த சமூகம் இறைவனின் கோப பார்வைக்கு உள்ளானது
வானில் இருந்து கால் மழையின் மூலமும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை தலைகீழாக இறைவன் புரட்டி போட்டதின் மூலமும் அந்த சமுகத்தை இறைவன் அழித்தான்
இது திருமறையில் கூறபட்டுள்ள வரலாறு
இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் லுத் நபி அவர்கள் வாழ்ந்த நகரத்தை புதைபொருள் ஆராட்சியாளர்கள் சில தினங்களுக்கு முன்பு கண்டறிந்தனர்
ஜோர்டானின் தென் பகுதியில் அமைந்துள் லெட் ஹமாம் மாவட்டதில் நடத்த பட்ட ஆய்வில் தான் இந்த நகரம் கண்டறிய பட்டுள்ளது
சாவு கடலின் மேர்க்கே ஜோர்டான் நதிக்கரையில் இருந்த நகரமான சத்தும் நகரம் கண்டறிய பட்டிருப்பதின் மூலம் திருகுர்ஆனில் கூற பட்ட வரலாற்று உண்மை நடை முறை சான்றுகள் மூலம் தற்போது மெய்பிக்க பட்டுள்ளது