வெள்ளி, 30 அக்டோபர், 2015

எச்சரிக்கை பாசிசம்


திருமலை நாயக்கர் மகாலை இடிக்க வேண்டும் எனச் சொல்வதற்கு தமிழ்ச் சிவசேனையினர் சொல்லும் காரணம் சோழ, பாண்டிய மன்னர்களின் அரண்மனைகள் எல்லாம் இன்று இல்லையாம். நாயக்கர் கால அரண்மனையாக இது உள்ளதாம்.எனவே இது அவமானச் சின்னமாம்.
பாசிசம் இப்படித்தான் வரலாற்றைக் கட்டமைக்கும் என்பதை அதன் வரலாற்றை அறிந்தவர்கள் அறிவர்.
சோழ, பாண்டியர்களின் அரண்மனைகளை இடித்தவர்கள் என்ன நாயக்க மன்னர்களா? சோழர்களின் அரண்மனைகளைச் சுந்தர பாண்டியன் அழித்தான். பாண்டியர்களின் சின்னங்களை மூன்றாம் குலோத்துங்கன் அழித்தான்.
இன்றுள்ளா முக்கியமான பாண்டியர் மற்றும் சோழர் கால ஆலயங்கள் பலவற்றிலும் திருப்பணிகள் செய்து இன்றுள்ள வடிவில் அமைத்துள்ளவர்கள் பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள்தான். ஆனானப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலையே எடுத்துக் கொள்ளுங்கள், அதன் மூல கோபுரமும் நந்தியும் மட்டுந்தான் ராஜராஜன் காலத்தியவை, மற்ற அனைத்தும் பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்களின் இணைப்புகள்தான்.
அதையெல்லாம் கூட நாயக்கர் காலத்தவை எனச் சொல்வீர்களா?