ஞாயிறு, 29 நவம்பர், 2015

மாதவிடாய் பிரச்சனையா? அப்போ இதை சாப்பிடுங்க



உலர் பழங்களில் சத்துக்கள் அதிகமாக காணப்படுவதால் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் உலர் திராட்சையில் அதிகமான சத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் இதன் ருசி காரணமாக பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி உலர் திராட்சையாக பயன்படுத்தப்படுகிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்
உலர் திராட்சைப் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்
உலர் திராட்சைப் பழத்தில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை இதை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.
மூலநோய் சரியாகும்
மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.
சத்துக்கள் நிறைந்தது
உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
தொண்டைக்கம்மல் குணமடையும்
தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக்கம்மல் குணமடையும்.
மாதவிடாய் கோளாறுகள் தீரும்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
மலச்சிக்கல் தீரும்
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.
கால்சியம் நிறைந்தது
உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும்
Puradsifm's photo.

Related Posts:

  • அடதேசதுரோகிகளா.? பை முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்பி அலகாபாத் நீதி மன்றத்திற்குள் நுழைந்த நபர் கைது - The New Indian Express நல்லா பாருங்க மக்களே… Read More
  • இன்ஷா அல்லாஹ்......... Read More
  • புனித மக்கா நகரை நோக்கி செலுத்திய ஏவுகணையை Global outrage over Houthi missile attack near Makkah MOHAMMED RASOOLDEEN, MOHAMMED AL-SULAMI & RASHID HASSAN | Published — S… Read More
  • மியான்மார் முஸ்லிம்கள் கொல்லப்படுவதும், முஸ்லிம்கள் உடைமைகள், அளிக்கும் வேலைசெய்யும் மியான்மார் ராணுவம் மாற்றம் புத்த வெறியர்கள். … Read More
  • துஆ செய்யுங்கள். உலகில் வாழும் அணைத்து முஸ்லிம்களுக்கும், துஆ செய்யுங்கள். அவர்கள் (உயிர் , உடமை, பாதுகாப்பு மாற்று சுமுக வாழ்விற்கு ) ..... … Read More