புதன், 25 நவம்பர், 2015

எட்டு இடங்களும் ஓர் அமைச்சர் பதவியும்...!

“வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு 
எட்டு இடங்கள் கேட்போம்” என்று திமுக கூட்டணியிலுள்ள
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர்
பேராசிரியர் காதர் முகைதீன் திருச்சியில் பேசியுள்ளார்.
எட்டு இடங்கள் என்ன, பதினைந்து இடங்கள் வேண்டும்
என்றுகூட கோரிக்கை வைக்கலாம். ஆனால்
கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதுதான் கேள்வி.
முஸ்லிம் லீகிற்கு எட்டு இடங்கள் என்பதுடன்
தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தால்
முஸ்லிம் லீகிற்கு ஓர் அமைச்சர் பதவி எனும் கோரிக்கையையும்
அழுத்தமாக முன்வைக்க வேண்டும்.
அதாவது ஆட்சியில் பங்கு தர வேண்டும்.
“எங்களை ஜெயிக்கவைத்து விட்டு நீ ஓரமாக ஒதுங்கி நில்”
எனும் பெரியண்ணன் மனப்பான்மைக்கு முடிவு கட்டவேண்டும்.
சட்டமன்றத் தேர்தலில் எட்டு இடங்கள், ஓர் அமைச்சர் பதவி
ஆகிய இந்த இரண்டு கோரிக்கைகளிலும் முஸ்லிம் லீக்
வெற்றி பெற்று விட்டால் அது வரலாற்றுச் சிறப்பு மிக்க
வெற்றியாகவே தமிழக அரசியலில் பொறிக்கப்படும்.
எட்டு இடங்கள், ஓர் அமைச்சர் பதவி என்பதில்
முஸ்லிம் லீக் இறுதிவரை உறுதியுடன் இருக்க வேண்டும்.
-சிராஜுல்ஹஸன்
Siraj Ul Hasan's photo.