திங்கள், 30 நவம்பர், 2015

‪#‎நீதி_வேண்டும்‬


கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் என்பவருக்கும் முஸ்லிம் அமைப்பினருக்கும் இடையே நடந்த சிறிய பிரச்சினையை ஊதி பெரிதாக்கினர் உதவி ஆய்வாளரும்,சில காவலர்களும் அதனை தொடர்ந்து கோவையில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார்
இந்நிலையில் கொலைக்கு காரணமானவர்கள் என காவல்துறையினரால் சொல்லப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்களை காவல்துறையினரிடம் ஆஜர் படுத்தினர் முஸ்லிம் இயக்கத்தினர்.
அத்துடன் பிரச்சினை முடியும் தருவாய்க்கு வந்த போது..
சமயம் பார்த்து காத்திருந்த Rss மற்றும் அதன் கிளை இந்துத்துவா அமைப்பினர் சில காவல்துறை கருப்பு ஆடுகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டனர்.
அதன் விளைவாக நவம்பர் 30 ஆம் தேதி கோவை மாநகரமே கலவரக்காடானது
எங்கு பார்த்தாலும் இந்துத்துவா அமைப்பினர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் முஸ்லிம்களாக பார்த்து குறிவைத்து தாக்கினர்.
தாக்குதலுக்குள்ளாகி உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வழியிலும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்
அத்தோடு நின்றுவிடாமல் மருத்துவமனை வளாகத்திற்குள்ளாகவே ஆரிஃப் என்ற முஸ்லிம் இளைஞரை உயிரோடு எரித்து கொன்றனர்.
இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கையில் தடுக்கவேண்டிய காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்தனர்
முஸ்லிம்களின் கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், அனைத்தையும் குறிவைத்து தாக்கி சூரையாடி தீக்கிரையாக்கினர்.
அதன் அப்போதைய மதிப்பு மட்டும் சுமார் 1000 கோடிக்கும் மேல் .
முஸ்லிம் செல்வந்தர்கள் சொத்துக்களை இழந்து நடுவீதிக்கு வந்தனர்
இஸ்லாமியருக்கு சொந்தமான ஷோபா என்ற மிகப்பெரிய ஜவுளி நிறுவனத்திற்குள் புகுந்து அனைத்தையும் கொள்ளையடித்தனர், எஞ்சியதை தீ வைத்து எரித்தனர்.
தொடர்ந்து நடந்த அந்த கலவரத்தில் சுமார் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
அப்போதைய ஆட்சியாளர்களோ அல்லது அதிகாரிகளோ மற்ற அரசியல் கட்சிகளோ பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக மட்டுமல்ல ஆறுதல்கூட சொல்லவில்லை
இந்த கலவர வழக்கில் இந்துத்துவாவினர் யாரும் கைது செய்து தண்டிக்கப்படவில்லை.
காவல்துறை யார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை வாங்கித்தரவில்லை..
மேலும் இந்த கலவரத்தால் முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்
கோவையில் முஸ்லிம்கள் நித்தம்,நித்தம் பயத்தில் செத்து பிழைத்தார்கள்
நீதி கிடைக்காததால்
விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இளைஞர்கள்
நாயாய் நக்கி பிழைப்பதைவிட மரணம் மேல் என நினைத்து பாதுகாப்ற்ற சூழலை மாற்ற தங்கள் சமூகத்தின் பயத்தின் வெளிப்பாடாய் எதிரிகளுக்கும், ஆதிக்க சக்தியினருக்கும் பதிலடி கொடுக்க நினைத்து சட்டத்தை கையில் எடுத்ததின் விளைவே 1998 கோவை குண்டுவெடிப்பு நிகழ்வு..
அதை நாம் நியாயப்படுத்தவில்லை..
ஆனால் அதை செய்தது குற்றம் என்றால்....
பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசும், காவல்துறையும் பாதுகாக்க தவறி அவர்களை இந்த சம்பவத்தை செய்ய தூண்டியதால் அவர்களும் குற்றவாளிகளே...
மேலும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் பொய்யாக சேர்த்து மேலும்,மேலும் தங்கள் வஞ்சத்தை தீர்த்து கொண்டனர் அரசும், காவல்துறையும்...
நாம் கேட்பதெல்லாம்..
குண்டு வைத்ததாக கூறி 17 ஆண்டுகளாக சிறை கொட்டடியில் தடுத்து வைத்திருக்கும் எம் சமுதாய இளைஞர்களைப்போல்...
19 முஸ்லிம்களை கொன்ற சங்பரிவார்களையும்,கொலைக்கு துணைபோன காவல்துறை கருப்பு ஆடுகளையும் கைது செய்து சிறையில் அடைத்தாயா?
இழந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கினாயா?
எங்களுக்கும் நீதி வேண்டும்?
யார் பெற்று தரவார்??
உயிர்களையும், உடமைகளையும் இழந்து வாடும் எம் சமுதாய தியாக செம்மல்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் இம்மையிலும்,மறுமையிலும் நற்கூலி வழங்கி அவர்களின் உள்ளங்களில் அமைதி நிலவச்செய்வானாக...