ஞாயிறு, 29 நவம்பர், 2015

மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26!


இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தவர்தான் ஹேமந்த் கர்கரே! தனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அராஜகங்களை கண்டு பொறுக்காமல் உண்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹேமந்த் கர்கரே! மாலேகான் குண்டு வெடிப்பு, முதல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை உண்மை குற்றவாளிகள் யார் என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர். சாது பிரக்யாசிங், பார்பனரான புரோகித், அசீமானந்தா என்று வரிசையாக கைதுகளை தைரியமாக செய்து காட்டியவர்.
'நான் இந்து மதத்தை நேசிப்பவன்: எனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் கொடுமைகளை நான் எப்படி காணாதிருக்க முடியும். இந்துத்வாவாதிகளிடமிருந்து எனக்கு கொலை மிரட்டலும் வருகிறது' என்று பேட்டி கொடுத்த சில நாட்களிலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார்.
நவம்பர் 26 ஆம் தேதி திட்டமிட்டு பாவிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தானிய தீவிரவாதிகள்தான் கொன்றனர் என்று செய்தியை திரித்து வெளியிட்டனர். அஜ்மல் கசாபுக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் வாய்க்கா வரப்பு சண்டையா என்ன? அவரை மட்டும் குறி பார்த்து சுடுவதற்கு என்ன காரணம்? சுடப்பட்ட அந்த இடத்துக்கு அவரை கூட்டி சென்றது யார்? பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த நிலையிலும் அவரது உயிர் பிரிந்தது எவ்வாறு என்பது இதுவரை விடை தெரியாத கேள்வி. சில மணி நேரங்களிலேயே அவரது கவச உடையும் மாயமானது: இதை எல்லாம் நன்கு அறிந்திருந்த இவரது மனைவி மோடி கொடுத்த பண முடிப்பையும் வாங்க மறுத்து விட்டார்.
நம் வாழ் நாளிலேயே மிகச் சிறந்த தேச பக்தரை இழந்து விட்டோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக!
சுவனப் பிரியன்
Engr Sulthan's photo.