பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும்.!- தமிழக அரசுக்கு SDPI தமிழ்மாநில தலைவர் KKSM தெஹலான் பாகவி கோரிக்கை.!
தமிழகத்தில் 150 முஸ்லிம்கள் ISIS அமைப்பில் சேர்ந்து இருப்பதாக கூறி பொய் பிரச்சாரங்களின் மூலம் தமிழகத்தின் அமைதியை கெடுக்க முயற்சிக்கும் பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என SDPI தமிழ்மாநில தலைவர் KKSM தெஹலான் பாகவி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.