வெள்ளி, 27 நவம்பர், 2015

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது : பிரபல உலக நாயகி நந்திதாதாஸ்....!!
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறிந்து விட்டதாக பிரபல உலக நாயகி நந்திதாதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது....
ஆசிய நாடுகளில் மிகப்பெரிய மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல, இதே நிலை நீடித்தால் எவ்வகையிலும் அது இந்தியாவிற்கு நன்மை பெயர்க்காது என்று கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல உலக நாயகி நந்திதாதாஸ் வெறும் நடிகை மட்டுமல்ல, மனித உரிமை போராளியாவார்.
குஜராத்தில் 2002 ல் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட போது அப்படுகொலைகளை வெளியுலகிற்கு கொண்டு செல்ல முஸ்லிம் சமுதாயத்திடம் தொலைக்காட்சி, பத்திரிக்கை, சினிமா உள்ளிட்ட எந்த மீடியா பலமும் இல்லாத சூழலில் குஜராத் இனப்படுகொலையை மையமாக வைத்தே தனி திரைப்படம் எடுத்தவர் நந்திதாதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Kaalaimalar's photo.