இஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன்..........
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகம் ஸ்வீடனில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது....
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகம் ஸ்வீடனில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது....
இந்த விழாவில் பலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஸ்வீடனுக்கு வருகைதந்து திறந்து வைத்தார்.
அவர் அங்கு உரையாற்றும்பொழுது: பலஸ்தீன் மக்களுக்கான ஸ்வீடனின் அங்கீகரிப்பு, சமாதான பேச்சுவார்த்தைகளை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வழிவகுக்கும் என்றும், இதேபோன்று ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளும் பலஸ்தீனை அங்கீகரிக்குமென்றும் கூறினார்.
ஸ்வீடன் பிரதமர் (Lofven) லொப்வென் பேசுகையில்: அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஸ்வீடன் பலஸ்தீனிய நாட்டுக்கு 1.5 பில்லியன் குரோனா(179.074 மில்லியன் டொலர்) உதவியளிக்கபடுமென்றும், பலஸ்தீன் தங்களது அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
பலஸ்தீன், ஸ்வீடனின் தலைநகரம் ஸ்டொக்ஹோமில் ஒரு பொது தூதுக்குழு நிலையமொன்றை வைத்திருந்தது. தற்பொழுதுதான் அது உத்தியோகபூர்வ வெளிநாட்டு தூதரகமாகியுள்ளது.
இதன்பின் பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் போன்றவை பலஸ்தீனை அங்கீகரிக்க உள்ளது. ஏற்கனவே பிரெஞ்சு பாராளுமன்றம் பலஸ்தீன்நாட்டை அங்கீகரிப்பதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தியுள்ளது.
இஸ்ரவேலிய வெளிநாட்டமைச்சர் அவிக்டோர், ஸ்வீடனின் இந்த நிலைப்பாட்டை மிக வன்மையாக சாடியுள்ளார். "எங்களது பிரதேசத்திற்கு வெளியேயுள்ள எவருமே எங்களது உள்நாட்டு விவகாரத்தில் முடிவெடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்