திங்கள், 23 நவம்பர், 2015

ஒரே ஆண்டில் 630 வகுப்பு மோதல்கள்..!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த ஆண்டு அக்டோபர் வரை கடந்த ஓர் ஆண்டுக்குள்
நாட்டில் 630 வகுப்பு மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், 
கடந்த நான்கு மாதங்களுக்குள் நடைபெற்ற வகுப்பு மோதல்களின்
எண்ணிககை 300 என்றும் மத்திய உள்துறை அமைச்சகம்
அதிகாரபூர்வமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மிகப்பெரிய அளவிலான சம்பங்கள் என்று
இரண்டே இரண்டு நிகழ்வுகளைத்தான் அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒன்று அட்டாலியில் நடைபெற்ற தேவாலயத் தாக்குதல்,
இரண்டாவது தாத்ரி படுகொலை.
மதங்களையும் மதச் சின்னங்களையும் மத உணர்வுகளையும்
சமூக வலைத்தளங்கள் மிக மோசமாகச் சித்திரிக்கின்றன.
கலவரங்கள் நடைபெற இதுவும்
ஒரு காரணம் என்று அறிக்கை கூறுகிறது.
“இந்த அறிக்கை வகுப்பு மோதல்களின் தீவிரத்தை மிகவும்
குறைத்துச் சிறிதாக்கிக் காட்டுகிறது” என்று இந்தியக்
கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் டி.ராஜா கூறியுள்ளார்.
Siraj Ul Hasan's photo.